Udhayanidhi:உசைன் போல்ட், தோனி, மு.க.ஸ்டாலினுக்கு உள்ள ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா? பேரவையில் உதயநிதி சொன்ன ஆச்சர்ய தகவல்!
Udhayanidhi Stalin: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீதான பதிலுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உசைன் போல்ட், தோனி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஒப்பிட்டு சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மானியக் கோரிக்கை விவாதம்
இன்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கூட்டுறவு துறை, உனவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் பதிலுரை
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை மானிய கோரிக்கை விவாதங்கள் மீதான பதிலுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் ஒரு சிலரின் பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றது.
உசைன் போல்ட், எம்.எஸ்.தோனியை ஒப்பிட்டு முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
ஒலிம்பிக் என்றால் உசைன் போல்ட், கிரிக்கெட் என்றால் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் இருவரும் வெற்றிகளையும், சாதனைகளையும் அடுக்கடுக்காக குவித்தவர்கள். ஒவ்வொரு போட்டியிலும், இவர்கள் சாதனைகளை இவர்களே முறியடித்துக் கொள்வார்கள். முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், களம் காணம் ஒவ்வொரு தேர்தலிலும், தனது முந்தைய சாதனையை விஞ்சும் அளவுக்கு வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
நமது திமுக அணி, நடந்து முடிந்த மக்களவை தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி 40க்கு 40 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உள்ளது. இந்த மகத்தான வெற்றியை பரிசு அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றிகள். இதற்கு காரணம் திமுக எனும் நமது திராவிட அணியின் தலைவர் நமது முதலமைச்சர் அவர்கள்தான். முதலமைச்சர் தலைமையேற்ற பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று உள்ளார் என கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ள நிலையில், தனது துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9