Kanchipuram: ’காஞ்சி மாநகராட்சியில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் நாளை கூண்டோடு ராஜினாமா?’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanchipuram: ’காஞ்சி மாநகராட்சியில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் நாளை கூண்டோடு ராஜினாமா?’

Kanchipuram: ’காஞ்சி மாநகராட்சியில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் நாளை கூண்டோடு ராஜினாமா?’

Kathiravan V HT Tamil
Jul 26, 2023 09:31 AM IST

“மாமன்றத்தில் எதிர்க்கட்சியான அதிமுக-பாஜக-பாமக-தமாகா இரு சுயேச்சைகள் உட்பட 15 பெர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்”

எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள்
எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள்

மாநகராட்சியில் திமுக., கவுன்சிலர்கள் 36 பேர் உள்ளனர். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் 15 பேர் உள்ளனர். இதில் திமுக., மேயர் தரப்பு ஆதரவு கவுன்சிலர் வார்டுகளுக்கு மட்டுமே பணிகள் நடந்து வருகிறது.

மேலும் அதே கட்சியை சேர்ந்த அதிருப்தி கவுன்சிலர்கள் வார்டுகளிலும் வேலை நடக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மாமன்றத்தில் எதிர்க்கட்சியான அதிமுக-பாஜக-பாமக-தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சைகள் உட்பட 15 பேர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்த வார்டு கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி குழு, கணக்கு குழு, பொது சுகாதாரம், பணி குழு, வரி விதிப்பு குழு ஆகிய பொறுப்புகள் இருந்தும் அதனால் எந்த பயனும் இல்லை. இதனால், அந்த பொறுப்புகளை வரும் நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.