Karunas : தென் மாவட்டத்தில் இனி எடப்பாடி கால் வைக்க முடியாது.. இனி நாங்கள் பொறுமை காக்கமாட்டோம்.. கருணாஸ் காட்டம்!
Karunas : இனி எந்த தேர்தல் வந்தாலும், துரோகச்செம்மல் எடப்பாடி தென்மாவட்டத்தில் ஜெயிக்கமுடியாது என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் சே. கருணாஸ் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு எடப்பாடி செய்த அத்தனை அரசியல் துரோகங்களுக்கு இனி நாங்கள் பொறுமை காக்கமாட்டோம்! எடப்பாடியை இனி அரசியல் அனாதை ஆக்கி, செல்லாகாசாக மாற்றுவோம் என புலிப்படைக் கட்சி தலைவர் சே. கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை நாள் ஏமாற்று போகிறார் எடப்பாடி
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”துரோகச் செம்மல் எடப்பாடி பழனிசாமி தரும் தேர்தல் வியூகம் வகுக்குறாராம், அதற்கு நேற்று (16.08.2024) செயற்குழு கூட்டமாம்! எனக்கு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, “கூரையில ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானத்தில ஏறி வையுகுண்டம் காட்டுவாராம்!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே மண்ணை கவ்வியவர், உள்ளாட்சி தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் ஜெயிக்கப் போறாராம்! இதில் தீர்மானம் வேறு! இன்று நடந்த செயற்குழுக்கூட்டத்தில் முன்மொழிந்த தீர்மானங்களும் பெரும்பாலும், ஏற்கெனவே பலமுறை உருட்டியவை! உருட்டியதையே உருட்டி இன்னும் எத்தனை நாள் ஏமாற்று போகிறார் எடப்பாடி!