தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழகத்தில் புதிய உருமாறிய ‘கொரோனா வைரஸ்’ மத்திய அரசின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் புதிய உருமாறிய ‘கொரோனா வைரஸ்’ மத்திய அரசின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Priyadarshini R HT Tamil
Apr 06, 2023 01:39 PM IST

Corona Update : தற்போது உள்ள XBB.1.16 வைரஸ் மேலும் அதன் ஸ்பைக் புரதத்தில் உருமாற்றம் அடைந்துள்ளது. T547I மாற்றம் அடைந்து XBB.1.16.1எனும் புதிய உபவைரஸ் உருவாகியுள்ளது. இந்தியாவில் 113 பேருக்கு அதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வார TPR 4 சதவீதம். இன்று TPR 6.6 %. இது சராசரி அளவே.

சென்னை மற்றும் செங்கல்பட்டு-TPR 7.9 %, கோயம்புத்தூர்- 6.4 %, திருவள்ளூர் மற்றும் திருச்சி – 6 %, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்யாகுமரி, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர்-5 %.

இந்நிலையில் தமிழக அரசு பரிசோதனைகளை அதிகரித்தால் மட்டுமே நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க இயலும். 

தமிழக அரசின் கொரோனா பரிசோதனைகள் - 

தற்போது வரை சராசரியாக நாளொன்றுக்கு 3,000 பேருக்கு மட்டுமே தமிழகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி 10 லட்சம் பெருக்கு 140 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அது பின்பற்றபடவில்லை.  பரிசோதனைகள் குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை. தற்போது அரசு பரிசோதனைகளை நாள் ஒன்றுக்கு 11,000 என அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதை முன்கூட்டியே செய்திருந்தால், தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்ககொண்டிருக்கலாம். மூலக்கூறு ஆய்வுகளும் குறிப்பிட்ட அளவு செய்யப்படுகிறா என்ற விவரம் தேவை. 

பொது சுகாதாரத்துறை புளூ போன்ற தொற்று நோய்களையும் முறையாக பரிசோதிக்க வேண்டும் எனக்கூறினாலும், சென்னை, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கூட புளூ பரிசோதனை ஆய்வகங்கள் இல்லை. சென்னையில் இன்று 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலேயே தலைநகர் சென்னையில் தான் பாதிப்பு அதிகம். சென்னையில் மட்டும் 1,080 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

கொரோனா இறப்பு? 

கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் 3 கொரோனா இறப்புகள் நிகழ்ந்திருந்தாலும், அவற்றை தமிழக சுகாதாரத்துறை பதிவு செய்யவில்லை. தூத்துக்குடியில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட 54 வயதுள்ள இணைநோய்கள் (புற்றுநோய்) உள்ள ஆண் நபர் இறந்துள்ளார். திருப்பூர் வெள்ளக்கோவிலில் 82 வயது இணைநோய் உள்ள தடுப்பூசி செலுத்தாத ஆண் நபர் இறந்துள்ளார். (அந்த வயதில் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், நோய் எதிர்ப்பு புரதம் சரியாக தூண்டப்படாது என்பது அறிவியல் உண்மை) கோவையில் 55 வயது இணைநோய்கள் உள்ள (ஈரல் பிரச்சனை, புற்றுநோய்) பெண்மணி நேற்று இறந்துள்ளார். இந்த 3 கொரோனா இறப்புகளையும் தமிழக அரசு பதியவில்லை. 

ஒமிக்ரான் XBB.1.16

தற்போது அதிகரித்து வரும் தமிழக கொரோனா பரவலுக்கு இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் XBB.1.16 காரணமாக இருப்பதால், தமிழகத்திலும், அது இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வைரஸில் உருமாற்றம் இல்லாமல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காது என்பதும் அறிவியல் உண்மை. தமிழகத்தில் இன்று வரை XBB.1.16ன் தாக்கம் இல்லை என அரசு கூறுகிறது.  

உலக சுகாதார நிறுவனத்தின் நோய்தொற்று துறை நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "ஒமிக்ரான் உருமாற்றம் இன்னமும் நிறைவடையவில்லை. மேற்கொண்டு வைரஸில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் "என வலியுறுத்திய நிலையில் தற்போது மத்திய அரசின் மூலக்கூறு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போது உள்ள XBB.1.16 வைரஸ் மேலும் அதன் ஸ்பைக் புரதத்தில் உருமாற்றம் அடைந்துள்ளது. T547I மாற்றம் அடைந்து XBB.1.16.1எனும் புதிய உபவைரஸ் உருவாகியுள்ளது. இந்தியாவில் 113 பேருக்கு அதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

குஜராத் 37, மஹாராஷ்ட்ரா 25, டெல்லி, ஹரியானா, புதுச்சேரி 3 பேர், கர்நாடகா மற்றும் தெலுங்கானா 14 பேர், கேரளா ஒருவர், தமிழகம்-13 பேர், தமிழகத்திலும் XBB.1.16.1ன் பாதிப்பு மத்திய மூலக்கூறு ஆய்வகம் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு XBB.1.16ன் பாதிப்பு இல்லவே இல்லை என கூறமுடியாது. 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் தனிமனித பாதிப்பு மட்டுமே உள்ளதென்றும், குழு பாதிப்பு (Cluster) இல்லையென்றும் கூறி வருகிறார். ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த 82 வயது வெள்ளக்கோவில் நபரின் மனைவியும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார். முக்கிய அரசு விழாக்களில் முக்கிய அரசு நபர்களே முகவுறை அணியாமல் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவது முகவுறை அணிவது குறித்து எதிர்மறை கருத்துகளை ஊக்குவிக்கிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்