தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஆட்சியர் நலம் விசாரிப்பு

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஆட்சியர் நலம் விசாரிப்பு

Karthikeyan S HT Tamil
Aug 22, 2023 10:55 AM IST

நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து நாகப்பட்டினம் ஆட்சியர் நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து நாகப்பட்டினம் ஆட்சியர் நலம் விசாரித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மீனவர்கள் ஆறுகாட்டுத்துறையிலிருந்து கிழக்கே 19 நாட்டிகல் மைல் தொலைவில் இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று படகுகளில் இலங்கையைச் சேர்ந்த 9 கடற்கொள்ளையர்கள் வீச்சருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை தாக்கினர்.

பாஸ்கர் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றையும், செந்தில்அரசன் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் 700 கிலோ வலை ஆகியவற்றையும் சிவபாலன் படகிலிருந்து ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் என மொத்தம் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து காயமடைந்த மீனவர்கள் பொருட்களை பறிகொடுத்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் ஆறுகாட்டுத்துறை கரை திரும்பினர். 

இலங்கை கடற்கொள்ளையர்கள் வீச்சு அரிவாள் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் தலையில் காயமடைந்த பாஸ்கர், அருள்ராஜ் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையிலும் சவுக்குமரக் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த செந்தில்அரசன், மருது, வினோத், வெற்றிவேல் உள்ளிட்ட மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்