MR Vijayabhaskar Arrest : எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது எதிரொலி.. 100 கோடி நில மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mr Vijayabhaskar Arrest : எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது எதிரொலி.. 100 கோடி நில மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

MR Vijayabhaskar Arrest : எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது எதிரொலி.. 100 கோடி நில மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 17, 2024 11:04 AM IST

MR Vijayabhaskar Arrest : வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பிரகாஷின் நில பத்திரம் தொலைந்து போனதை, கண்டுபிடிக்க முடியவில்லை என சான்று வழங்கிய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜ் இன்று சிபிசிஐடி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு கரூர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது எதிரொலி.. 100 கோடி நில மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது எதிரொலி.. 100 கோடி நில மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

இந்த வழக்கில் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பிரகாஷின் நில பத்திரம் தொலைந்து போனதை, கண்டுபிடிக்க முடியவில்லை என சான்று வழங்கிய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜ் இன்று சிபிசிஐடி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு கரூர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

இன்று காலை கரூர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரதிவிராஜ் சிபிசிஐடி போலீசாரால் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

100 கோடி நிலமோசடி வழக்கு

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

முன் ஜாமின் மனு தள்ளுபடி

இந்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நில மோசடி வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே தன் மீதான வழக்குக்கு முன் ஜாமீன் கேட்டு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

தனது அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன் ஜாமீனை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார்.

சிபிசிஐடி ரெய்டு

இதனிடையே கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்த நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் உத்தரவை தள்ளி வைத்து இருந்தனர். இதனிடையே கடந்த ஜூலை 5ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்பு உடையவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

கேரளாவில் கைது

கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரணை செய்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவரது சகோதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

14 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கரூரில் பதுங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோசடிக்கு துணையாக இருந்த வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.