Magalir Urimai Thogai: ’கஜானாவுல பணமே இல்ல… எல்லாருக்கும் ரூ.1000..’ அமைச்சர் தா.மோ.அன்பரசன் புது விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Magalir Urimai Thogai: ’கஜானாவுல பணமே இல்ல… எல்லாருக்கும் ரூ.1000..’ அமைச்சர் தா.மோ.அன்பரசன் புது விளக்கம்!

Magalir Urimai Thogai: ’கஜானாவுல பணமே இல்ல… எல்லாருக்கும் ரூ.1000..’ அமைச்சர் தா.மோ.அன்பரசன் புது விளக்கம்!

Kathiravan V HT Tamil
Dec 21, 2024 12:58 PM IST

”எடப்பாடி பழனிசாமி ‘விடியா ஆட்சி’ என்று சொல்கிறார். ’விடியா மூஞ்சிகளுக்கு விடியா ஆட்சி’ ஆக தான் தெரியும். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்”

’கஜானாவுல பணம் இல்ல…! சீக்கிரமே எல்லாருக்கும் ரூ.1000 வந்துரும்’ அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
’கஜானாவுல பணம் இல்ல…! சீக்கிரமே எல்லாருக்கும் ரூ.1000 வந்துரும்’ அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். அதில், எடப்பாடி பழனிசாமி ‘விடியா ஆட்சி’ என்று சொல்கிறார். ’விடியா மூஞ்சிகளுக்கு விடியா ஆட்சி’ ஆக தான் தெரியும். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து 1.17 கோடி குடும்பங்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்து வருகிறோம். ஒரு சிலர் எனக்கு பணம் வரவில்லை என்று சொல்வார்கள். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள், ரூபாய் தட்டுப்பாடு உள்ளது, கஜானாவில் பணம் இல்லை, தலைவர் பணத்தை ரெடி செய்து கொண்டு இருக்கிறார். நிச்சயமாக தகுதி உள்ள குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.