தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister Trp Raja's Response To Eps Regarding The Neengal Nalama Scheme

Neengal Nalama: ’CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?’ ஈபிஎஸ்க்கு டிஆர்பி ராஜா பதில்!

Kathiravan V HT Tamil
Mar 06, 2024 05:52 PM IST

“கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும் என ஈபிஎஸ்க்கு டிஆர்பி. ராஜா கேள்வி”

நீங்கள் நலமா திட்டம் தொடர்பான விமர்சனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதில்
நீங்கள் நலமா திட்டம் தொடர்பான விமர்சனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதில்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில், ’நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்’ என்ற பெயரில் அதிமுக ஹேஷ்டேக் செய்து ட்ரண்ட் செய்து வருகிறது. இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நீங்கள் நலமா" என்று கேட்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை! #நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் ! என பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார் !

விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு #விடியல்_ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், #திராவிட_மாடல் ஆட்சியில் என பதிவிட்டுள்ளார்.

IPL_Entry_Point