தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister Kn Nehru's Response To Viralimalai Mla Vijayabaskar's Question In The Tamil Nadu Legislative Assembly

’விராலிமலைக்கு தண்ணீ வேணும்’ விஜயபாஸ்கர் கேள்விக்கு KN நேரு சொன்ன பதில்

Kathiravan V HT Tamil
Mar 31, 2023 10:30 AM IST

ஒருநாளைக்கு 8 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் தேவைப்படுகிறது. இதனை கூடுதலாக வழங்க ஆவண செய்ய கோரிக்கை

சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ - அமைச்சர் கே.என்.நேரு
சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ - அமைச்சர் கே.என்.நேரு

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் விராலிமலை ஊராட்சியில் 20125 பேர் வசிக்கிறார்கள். நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் 11.7 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவைப்படும் நீர் உள்ளூர் நீராதாரம் மூலம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

பின்னர் பேசிய சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, ’விராலிமலை என்பது பிரசித்தி பெற்ற கோயில் நகரம் மட்டுமல்ல வளர்ந்து வரும் தொழில்நகரம், 3.20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை, விராலிமலை எல்லாம் ஒன்றாக இருக்க கூடிய அளவுக்கு மிகப்பெரிய தொழில் நகரமாக இருந்து வருகிறது. எனவே இப்போது வழங்கும் குடிதண்ணீர் போதவில்லை, ஒருநாளைக்கு 8 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் தேவைப்படுகிறது. இதனை கூடுதலாக வழங்க ஆவண செய்யும்படி’ கேட்டார்

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, அந்த குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதால் பைப் லைன்கள் சேதமடைந்துவிட்டது. புதுக்கோட்டை, விராலிமலை பகுதிகளில் புது கூட்டுக்குடிநீர் திட்டத்தை உருவாக்க 547 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. தகுந்த நிதி ஆதாரங்கள் திரட்டுவதற்காக காத்திருக்கிறோம். அதற்கு தாமதமாகும் என்பதால் 76 கோடி செலவில் அதை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாண்புமிகு உறுப்பினர் சொல்வதை நான் நன்றாக அறிவேன்; அந்த பகுதியையும் நன்றாக அறிவேன். எவ்வுளவு விரைவாக செய்து தர முடியுமோ அதை செய்ய அனைத்து முயற்சிக்களும் எடுப்போம் என நேரு உறுதி அளித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்