தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister Kn Nehru's Response To Former Chief Minister O. Panneer Selvam's Question About Ward Redistricting In The Tamil Nadu Legislative Assembly

OPS கேட்ட கேள்வி! அப்படியே திருப்பிவிட்ட KN.நேரு! அப்பாவு செய்த சம்பவம்!

Kathiravan V HT Tamil
Apr 01, 2023 10:27 AM IST

TamilNadu Assembly: ஒரு ஊரிலே செல்வாக்கு மிக்க நபர் இருப்பாரானால் இவர் ஒருவார்டிலும் இவர் மனைவி ஒரு வார்டிலும் நின்று வெற்றி பெறவே இதனை பிரித்துள்ளார்கள்-கே.என்.நேரு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோ தங்கராஜ் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வார்டு வரையரை செய்யும் போது இருக்கும் பிரச்னைகளை ஈஸ்வரன் அண்ணன் அவர்கள் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.

இதில் கணவர் ஒரு வார்டிலும்; மனைவி ஒரு வார்டிலும், தந்தை ஒரு வார்டிலும் மகன் ஒரு வார்டிலும் இருக்கும் சூழல் உள்ளது. வார்டு மறுவரை செய்யும் போது கூட்டு குடும்பமாக இருந்தால் அனைவரும் ஒரே வார்டில் வாக்கு அளிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இவற்றை சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘கணவன் ஒரு வார்டிலும் மனைவி ஒரு வார்டிலும் இருந்தால் அதற்கு பெயர் குடும்பம் இல்லையே; வாக்காளர் பட்டியலில் அப்படி இருக்கும் வார்டு வரையறையில் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்’ என்றார்.

ஓ.பன்னீர் செல்வத்தின் கேள்விக்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஒரு ஊரிலே செல்வாக்கு மிக்க நபர் இருப்பாரானால் இவர் ஒருவார்டிலும் இவர் மனைவி ஒரு வார்டிலும் நின்று வெற்றி பெறவே இதனை பிரித்துள்ளார்கள்.

இதை செய்தது உங்கள் காலத்தில்தான். 2017இல் நீங்கள்தான் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்து இதுபோல் தேர்தல் நடைபெற வேண்டும் என்று சொல்லி உள்ளீர்கள்.

இந்த பிரச்னைகளை பார்க்கவே நகராட்சி மற்றும் ஊரகத்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கமிட்டி அமைத்து சரி செய்ய முயன்றோம் ஆனால் நீதிமன்றம் சொன்ன காரணத்தால் உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டது. மாண்புமிகு உறுப்பினர் சொன்ன கருத்து நல்ல கருத்து நிச்சயம் அதை கவனிப்போம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்