Kalakshetra : கலாஷேத்ரா விவகாரம்.. பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு.. கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு பறந்த உத்தரவு!
Kalakshetra Issue : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் வழக்கில் கலாஷேத்ரா அறக்கட்டளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரி பத்மனை பணி நீக்கம் செய்து கடந்த ஏப்ரல் மாதம் 31ம் தேதி கலாஷேத்ரா அறக்கட்டளை உத்தரவிட்டது. கலாஷேத்ரா பிறப்பித்த இந்த உத்தரவு சட்டவிரோதமானது, தனக்கு எதிரான புகார்கள் தவறானவை என ஹரி பத்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கலாஷேத்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், நடனத்துறை முன்னாள் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து கடந்த ஏப்ரல் மாதம் 31ஆம் தேதி கலாஷேத்ரா அறக்கட்டளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஹரி பத்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கலாஷேத்ரா பிறப்பித்த இந்த உத்தரவு சட்டவிரோதமானது எனவும், தனக்கு எதிரான புகார்கள் தவறானவை என்பதால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கலாஷேத்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு
முன்னதாக கலாஷேத்ரா அறக்கட்டளை திருவான்மீயூரில் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பதாக கடந்த மார்ச் மாதம் புகார்கள் எழுந்தது. உலக அளவில் புகழ் பெற்ற மிகப்பெரிய அறக்கட்டளை நிறுவனமாக கலாஷேத்ராவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவிகள், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் அமர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க முன் வந்த தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
நிபந்தனை ஜாமீன்
அதன் படி கலாக்சேத்ரா அறக்கட்டளையில் பணியாற்றும் பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஏப்ரல் 3 ஆம் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் 3 பேர் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் பேராசிரியர் ஹரிபத்மன் மத்திய அரசின் நிரந்தர பணியாளர் என்பதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு
இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை அறிய, கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், தமிழக முன்னாள் காவல்துறை தலைவர் லெத்திகா சரண், மருத்துவ நிபுணர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் இந்த குழுவில் அடங்குவார்கள்.
கலாஷேத்ராவின் தலைவர் எஸ். ராமதுரையால் இது அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களை நிறுவனத்தின் நிர்வாகம் பாதுகாப்பதாக குற்றம் சாட்டியதால் சுதந்திரமான விசாரணையை விரும்பிய மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தலைவணங்கி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து இது அமைக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்