தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalakshetra Issue: மாணவி பாலியல் புகார்.. கலாஷேத்ரா முன்னாள் நடனப் பேராசிரியர் கைது!

Kalakshetra Issue: மாணவி பாலியல் புகார்.. கலாஷேத்ரா முன்னாள் நடனப் பேராசிரியர் கைது!

Aarthi Balaji HT Tamil
Apr 25, 2024 07:17 AM IST

Kalakshetra: பாலியல் தொல்லை கொடுத்து இருப்பதாக, முன்னாள் மாணவி அளித்த புகாரின் பெரில் சென்னையில் கலாஷேத்ரா முன்னள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீஜித் கிருஷ்ணா
ஸ்ரீஜித் கிருஷ்ணா

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து மாணவிகள், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் அமர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க முன் வந்த தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

நிபந்தனை ஜாமீன்

அதன் படி கலாக்சேத்ரா அறக்கட்டளையில் பணியாற்றும் பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஏப்ரல் 3 ஆம் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் 3 பேர் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் பேராசிரியர் ஹரிபத்மன் மத்திய அரசின் நிரந்தர பணியாளர் என்பதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு

இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை அறிய, கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், தமிழக முன்னாள் காவல்துறை தலைவர் லெத்திகா சரண், மருத்துவ நிபுணர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் இந்த குழுவில் அடங்குவார்கள்.

கலாஷேத்ராவின் தலைவர் எஸ். ராமதுரையால் இது அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களை நிறுவனத்தின் நிர்வாகம் பாதுகாப்பதாக குற்றம் சாட்டியதால் சுதந்திரமான விசாரணையை விரும்பிய மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தலைவணங்கி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து இது அமைக்கப்பட்டது.

ஸ்ரீஜித் கைது

இப்படி இருக்கும் சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு, கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு பெண் சென்னை காவல் துறைக்கு புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். புகாரில் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று ( ஏப்ரல் 24) ஷீஜித்தை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்