Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?

Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?

Karthikeyan S HT Tamil
Jun 26, 2024 02:40 PM IST

Senthil Balaji Case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?
Senthil Balaji Case: சூடுபிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே நீதிமன்றக் காவலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

41வது முறையாக காவல் நீட்டிப்பு

இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் (ஜூன் 25) முடிவடைவடைந்தது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 41-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய மனுக்கள் மீது விசாரணை

இதற்கிடையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூலை 1ஆம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்துள்ளார்.

4 மாதம் அவகாசம்

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முதன்மை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக்கூடாது என்றும் மனு மீது மீண்டும் மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் முடிக்காததால் மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.