Loksabha Election 2024: ’தென்காசி தொகுதிக்கு NO சொன்ன பாஜக?’ அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா? கிருஷ்ணசாமி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Loksabha Election 2024: ’தென்காசி தொகுதிக்கு No சொன்ன பாஜக?’ அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா? கிருஷ்ணசாமி!

Loksabha Election 2024: ’தென்காசி தொகுதிக்கு NO சொன்ன பாஜக?’ அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா? கிருஷ்ணசாமி!

Kathiravan V HT Tamil
Jan 02, 2024 01:04 PM IST

”1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார்”

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி - பாஜக நிர்வாகி தென்காசி ஆனந்தன்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி - பாஜக நிர்வாகி தென்காசி ஆனந்தன்

புதிய தமிழகம் கட்சித் தலைவராக உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி நாடாளுமன்றத் தேர்தலின்போது தென்காசி நாடாளுமன்றத் தொகுதியிலும், சட்டமன்றத் தேர்தலின்போது ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

1996, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி 1996 மற்றும் 2011ஆகியத் தேர்தல்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.

அதே போல் 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.

தொடர்ந்து பாஜக உடன் அனுக்கம் காட்டி வரும் கிருஷ்ணசாமி வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தென்காசி தொகுடியிலேயேதான் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்த தொகுதியில் பாஜகவே நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை குறிவைத்து பாஜக களப்பணி ஆற்றி வருகிறது.

பாஜக குறி வைத்துள்ள 10 தொகுதிகளில் தென்காசி தனித் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாஜக நிர்வாகியும் தொழிலதிபருமான தென்காசி ஆனந்தன் என அறியப்படும் ஆனந்தன் அய்யாச்சாமியை வேட்பாளராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பாஜகவின் அயல்நாட்டு அணிகள் பிரிவின் துணைத் தலைவராக உள்ள 'தென்காசி ஆனந்தன்' என்று அழைக்கப்படும் அனந்தன் அய்யாசாமி, ஸ்டார்ட்அப் தென்காசி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், ஆனந்தன் இன்டெல் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிப் வடிவமைப்பு துறையில் பணிபுரிந்து பொறியியல் இயக்குநராகபணியாற்றி உள்ளார். அவர் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் புரோக்கரேஜ் தொழிலையும் நடத்தி வருகிறார், அவர் இந்தியாவில் இருப்பதால் அதை அவரது மனைவி கவனித்து வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்ட zoho நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவின் ஆதரவு தென்காசி ஆனந்தனுக்கு உள்ளது முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர், பிஜேபி சார்பாக தென்காசியில் களமிறங்குகிறார் தொழிலதிபர் ஆனந்தன் அய்யாசாமி. தென்காசி கிடைக்காததால் அதிமுக பக்கம் செல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி என தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அனைத்து திட்டங்களையும் புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளித்து அதனை வரவேற்று வந்த நிலையில், சேலத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுகத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் பாஜக நிர்வாகியின் தொடர்பு இருப்பதாக கூறி கிருஷ்ணசாமி கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அமலாக்கத்துறை அளித்துள்ள நோட்டீஸில் விவசாயி சின்னையனின் சாதி பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கும் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.