‘பாலாடை பிரதமன்.. பகளாபாத்.. அபுகட்டா குல்பி..’ திமுக செயற்குழுவை ஆக்கிரமித்த வடமாநில உணவுகள்!
‘சுத்த சைவமாகவும், அதே நேரத்தில் தமிழக உணவுகள் மட்டுமின்றி, வடமாநில உணவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாக, திமுக செயற்குழு உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தது’
திமுக செயற்குழுவில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதோ நீண்ட.. அதன் பட்டியல் விபரம்:
1.பில்டர் காபி மற்றும் டீ
2.ரசமலாய் ஸ்வீட்
3.பாலாடை பிரதமன்
4.தயிர்வடை காரபூந்தி
5.ஆனியன் தயிர் பச்சடி
5.காராமணி பருப்பு உசிலி
6.உருளை பட்டாணி காரக்கறி
7.பூசணிக்காய் ரசவாங்கி
8.உருளை பிங்கர் சிப்ஸ்
9.பிரஷ் மாங்காய் ஊறுகாய்
10.வெஜிடபுள் பன்னீர் முந்திரி புலவ்
11.வெஜிடபுள் குருமா
12. சாதம்
13. சி.வெங்காயம் முருங்கை சாம்பார்
15.தக்காளி ரசம்
16. பகளாபாத்
17.அப்பளம்
18.மினரல் வாட்டர் பாட்டில்
19.அபுகட்டா குல்பி
20.வாழைப்பழம்
21.கல்கத்தா பீடா
இவற்றில் சில கேட்டகிரிகளுக்கு தனித்தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அதன் பொறுப்பாளர்களாக உணவுகளை பரிமாறினர். சுத்த சைவமாகவும், அதே நேரத்தில் தமிழக உணவுகள் மட்டுமின்றி, வடமாநில உணவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாக, திமுக செயற்குழு உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தது.