தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Lic: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து

LIC: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து

Manigandan K T HT Tamil
Apr 02, 2023 06:12 PM IST

life Insurance Corporation of India: சென்னையில் பரபரப்பான அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில் உள்ளது எல்ஐசி அலுவலகம்.

எல்ஐசி கட்டடம்
எல்ஐசி கட்டடம்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் பரபரப்பான அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில் உள்ளது எல்ஐசி அலுவலகம். இந்த கட்டடம் பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்தக் கட்டடம் 177 அடி உயரத்தைக் கொண்டது. முன்னொரு காலத்தில் மிகப் பெரிய கட்டடமாக இருந்து வந்தது.

இது இந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைமையகம் ஆகும். இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புப் படை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயை அணைத்தனர். எல்ஐசி மேல் தளத்தில் உள்ள விளம்பர பேனரில் ஏற்பட்ட மின்கசிவால் தீ பற்றியது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்