தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Law Or Order Without Police? What Dgp Sylendrababu Says

Trichy: போலீஸ் இல்லாமல் சட்டமா ஒழுங்கா? என்னசொல்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 02, 2023 11:41 AM IST

கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் போலீஸ் இல்லாமல் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படலாம்

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு (Sylendra Babu IPS (Facebook))

ட்ரெண்டிங் செய்திகள்

உலகம் முழுவதும் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் மிகக் கடுமையானதாக இருந்த பல வேலைகள் இன்று நிமிடத்தில் செய்து முடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மனித வாழ்க்கை பெருமளவு மேன்மை அடைந்துள்ளது .

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் ஆன என்ஐடியில் அவசரகால தொடர்பு மற்றும் சேவை சிறப்பு ஆராய்ச்சி மைய துவக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு என்.ஐ.டியின் இயக்குனர் ராம் கல்யாண் தலைமை வகித்தார். விழாவில் மத்திய மண்டல போலீஸ் ஐஜி கார்த்திகேயன் திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக டிஜிபி சைலேந்திரபாபு சிறப்புரையாற்றினார்.

அப்போதுபேசிய டிஜிபி சைலேந்திரபாபு ஊதியத்திற்காக மட்டும் மாணவர்கள் கல்வி கற்க கூடாது. சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் மாணவர்கள் கற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி சமுதாய மாற்றம் குறித்த பல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக டிரைவர்கள் இல்லாத பேருந்து, ரயில்கள், விமானங்கள் கூட ஓடும் நிலை ஏற்படலாம். அதேபோல கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் போலீஸ் இல்லாமல் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படலாம். இதனால் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் தங்கள் பணியை இழக்கும் நிலை கூட ஏற்படும் அபாயமும் உள்ளது. மருத்துவத்துறையில் ரோபோக்கள் சிகிச்சை அளிக்கும் நிலை தற்போது வந்துள்ளது போலீஸ் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும் விரைவில் குற்றவாளிகளை கண்டறியும் நிலை தற்போது உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்