Kanimozhi MP : சிந்தனையை செதுக்கி கொண்டவர்கள் தான் உண்மையான தலைவர்கள் -கனிமொழி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanimozhi Mp : சிந்தனையை செதுக்கி கொண்டவர்கள் தான் உண்மையான தலைவர்கள் -கனிமொழி

Kanimozhi MP : சிந்தனையை செதுக்கி கொண்டவர்கள் தான் உண்மையான தலைவர்கள் -கனிமொழி

Divya Sekar HT Tamil
Nov 23, 2022 01:49 PM IST

புத்தகங்களை தேடித் தேடி தனது சிந்தனையை செதுக்கிக் கொண்டவர்கள்தான் இந்த சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்திருக்கிறார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து தரக்கூடியது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான்.பேரறிஞர் அண்ணா, ஒரு வீட்டில் நூலகம் இல்லையென்றால் அதை வீடாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்வதில் இருந்தே புத்தகத்தின் முக்கியத்துவம் நமக்கு தெரிய வேண்டும். தான் படித்த புத்தகத்தை படித்து முடித்த பின்பு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் தெரிவிக்கும் அளவுக்கு அவர் வாசிப்பு பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

தூத்துக்குடி புத்தக திருவிழா
தூத்துக்குடி புத்தக திருவிழா

புத்தகங்கள் இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் என்னால் ஒரு புது உலகத்தில் வாழமுடியும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களை, எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை பார்த்து பயந்தார்கள். இதனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. புத்தகத்தை, எழுத்தாளனை, சிந்தனையாளனை இல்லாமல் செய்துவிட்டால் இந்த மக்களை நாம் அடிமையாகவே வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் நினைத்தார்கள்.

இதனால் நாம் புத்தகங்களின் வீரியத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் சாதாரண வார்த்தை இந்த சமூகத்தை மாற்றக்கூடிய ஒன்றாக மாற முடியும். புத்தகங்களை தேடித் தேடி தனது சிந்தனையை செதுக்கிக் கொண்டவர்கள்தான் இந்த சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்திருக்கிறார்கள். எது நமதுஅடையாளம், எது நமது வரலாறு, எதை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித்தரக் கூடியது புத்தகங்கள். அனைவரும் படிப்பதற்காக புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்” என்றார்.

அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவன்

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன்,”தமிழக முதல்வர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் புத்தக திருவிழா நடந்து வருகிறது. புத்தகத்தின் முக்கியத்துவத்தை வருங்கால தலைவர்களாகிய இளைஞர்கள் அறிய வேண்டும், புத்தக பதிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும், புத்தகங்கள் பதிப்பிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும், முதல்-அமைச்சரின் முயற்சியால் புத்தக திருவிழா நடக்கிறது.

ஜனவரி மாதத்தில் உலக அளவிலான புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழர்கள் நல்ல அறிவாற்றல் பெற்ற சமுதாயமாக இருக்க வேண்டும், தங்களை நல்ல சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டும், புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக புத்தக திருவிழா நடக்கிறது. புத்தகங்களை வாசிப்பதால் அறிவாற்றலை பெருக்கி கொள்ள முடியும் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை நீங்களே தேர்வு செய்து படிக்க வேண்டும்” என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.