Kallakurichi hooch tragedy: தொடரும் கள்ளக்குறிச்சி மரண ஓலம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு!
Kallakurichi hooch tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 பெண்கள் உட்பட 56 ஆக அதிகரித்து உள்ளது. கள்ளச்சாராயம் குடித்த மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்து உள்ளது. நேற்று இரவு வரை 55 பேர் உயிரிழந்து இருந்த நிலையில், இன்றைய தினம் 56 ஆக உயர்ந்து உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதன் என்பவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 பெண்கள் உட்பட 56 ஆக அதிகரித்து உள்ளது. கள்ளச்சாராயம் குடித்த மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஜூன் 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன் தினம் வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக இருந்தப்போது, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
கைது
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனைக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய புகாரில் குற்றப்பின்னணி உடையவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர்.
விசாரணை அதிகாரி நியமனம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சிபிஐ விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்