Kallakurichi hooch tragedy: மெத்தனால் இவ்வளவு கொடூரமானதா? கள்ளச்சாராயம் விஷச்சாராயமாக மாறுவது எப்படி? - ஓர் அலசல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kallakurichi Hooch Tragedy: மெத்தனால் இவ்வளவு கொடூரமானதா? கள்ளச்சாராயம் விஷச்சாராயமாக மாறுவது எப்படி? - ஓர் அலசல்!

Kallakurichi hooch tragedy: மெத்தனால் இவ்வளவு கொடூரமானதா? கள்ளச்சாராயம் விஷச்சாராயமாக மாறுவது எப்படி? - ஓர் அலசல்!

Jun 23, 2024 08:10 AM IST Kalyani Pandiyan S
Jun 23, 2024 08:10 AM , IST

Kallakurichi hooch tragedy: ஆல்கஹால் குரூப்பில் நிறைய டைப் இருக்கின்றன. நம்மூர் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுபானத்தில் இருப்பது எத்தில் ஆல்கஹால். மதுபானத்தின் வகையை பொறுத்து, அதில் கலக்கப்படும் எத்தில் ஆல்கஹாலின் சதவீதம் மாறுபடும். - கள்ளச்சாராயம் விஷச்சாராயமாக மாறுவது எப்படி?

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில், இதுவரை 55 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எவ்வளவோ விபத்துக்கள், கொலைகள் உள்ளிட்டவற்றில் சிக்கி சின்னாபின்னாமானவர்களையெல்லாம் கூட, கடைசி நொடியில் காப்பாற்றும் இந்த நவீன மருத்துவம், இந்த விஷயத்தில் இவ்வளவு தடுமாறுவது ஏன்? விஷச்சாராயம் என்ன அவ்வளவு கொடூரமானதா? கள்ளச்சாராயம் எப்படி விஷச்சாராயமாக மாறுகிறது உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள பேராசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினேன்.  

(1 / 5)

டாஸ்மாக் கடைகளில் எத்தில் ஆல்கஹால் அவர் பேசும் போது, “ஆல்கஹால் குரூப்பில் நிறைய டைப் இருக்கின்றன. நம்மூர் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுபானத்தில் இருப்பது எத்தில் ஆல்கஹால். மதுபானத்தின் வகையை பொறுத்து, அதில் கலக்கப்படும் எத்தில் ஆல்கஹாலின் சதவீதம் மாறுபடும். எ.காட்டாக டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் பீர்வகை மதுபானத்தில், ஆல்கஹால் 6 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தால், அதில் 6 சதவீதம் எத்தில் ஆல்கஹால் கலப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.    

(2 / 5)

பிராந்தியில் 40 சதவீதம் ஆல்கஹால் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படியானால், அதில் 40 சதவீத எத்தில் ஆல்கஹால் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், கள்ளச்சாரயத்தில் எத்தில் ஆல்கஹாலுக்கு பதிலாக, மெத்தனாலை கலப்பார்கள். இதுவும் ஒரு ஆல்கஹால் குரூப்தான். இந்த மெத்தனால் மனித உடலுக்குள் செல்லும் போது, அங்கு இருக்கும் தண்ணீருடன் இணைந்து, அவை பார்மால்டிஹைடாக மாறும். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் உறுப்புகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுத்துவார்களே, அதுதான் இந்த பார்மால்டிஹைடு.  

(3 / 5)

அடிப்படை காரணம் என்ன? இது உடலுக்குள் செல்லும் போது, உங்கள் உடலில் உள்ள தண்ணீர் முழுவதையும் அது வெளியே எடுத்து விடும். இதனால் உடலில் இருக்கக்கூடிய செல்கள் சாக ஆரம்பிக்கும். இது சாவை நோக்கி அழைத்து செல்லும். இதுதான் சாராயம் குடிக்கும் நபர்கள் இறப்பதற்கான அடிப்படை காரணம் ஆகும்.  

(4 / 5)

போதை கொஞ்சம் அதிமாக வரவேண்டும் என்பதற்காக இதில் மெத்தனாலை கலந்து விடுவார்கள். பொதுவாகவே மெத்தனால் விஷத்தன்மை வாய்ந்தது. நீங்கள் 10 மிலி மெத்தனாலை குடித்தாலே, அது உங்களை சாவை நோக்கி அழைத்துச் சென்று விடும். 1லிட்டர் சாராயத்தில் 1 மிலி அல்லது 2 மிலி மெத்தனால் கலந்தால், பெரிதாக ஒன்றும் தெரியாது. எவ்வளவு சதவீதம்ஒரு லிட்டர் பாட்டிலில் நீங்கள் 10 மிலி மெத்தனாலை கலந்தாலே அதில் 10 சதவீதம் மெத்தனால் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இதனை அருந்தும் போது, முதலில் பாதிக்கப்படுவது உங்களது கல்லீரல்தான். அது பாதிக்கப்பட்டாலே, இன்னபிற பாகங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு விடும். கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட 250 மிலி பாக்கெட் சாராயத்தில், 20 - 25 சதவீதம் அளவிற்காவது மெத்தனால் இருந்திருக்க வேண்டும். இந்த மெத்தனால், சாராயத்தை குடித்த அடுத்த கணமே, உங்களை சாவை நோக்கி அழைத்துச் சென்று விடும்.” என்று பேசினார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்