தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Explainer : உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ் காணாமல் போய்விட்டதா? அதை பெறும் வழிமுறைகள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்

HT Explainer : உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ் காணாமல் போய்விட்டதா? அதை பெறும் வழிமுறைகள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்

Priyadarshini R HT Tamil
Jun 19, 2023 10:34 AM IST

HT Explainer : உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம். அதை எப்படி பெறவேண்டும் என்ற விவரத்தை இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், பயணம், இயற்கை சீற்றம் போன்றவற்றால் நாம் அவற்றை இழக்க நேரிடலாம். அவ்வாறு இழந்தால் அவற்றை திரும்ப பெறுவது எப்படி என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

முதலில் நம் சான்றிதழ்களை எங்கு, எந்த இடத்தில், எப்போது, எப்படி தொலைத்தோம், என்பது பற்றி போலீசாருக்கு புகார் கொடுக்க வேண்டும். இதுதான் முதல்படி.

மேலும் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் புகார் கொடுக்க முடியும்.

புகார் அளித்த பின் போலீசார் நாம் சான்றிதழ் தொலைத்த இடத்தில் விசாரணை நடத்துவார்கள். அப்போதும் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிக்க முடியாத சான்றிதழ், அதாவது நான் டிரேசபிள் சர்டிபிகேட் என்ற சான்றிதழை அவர்கள் நமக்கு வழங்குவார்கள். 

குறிப்பிட்ட நபர் அவருடைய சான்றிதழை தொலைத்துவிட்டார். இதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த நான் டிரேசபிள் சர்டிபிகேட் வழங்கப்படுகிறது. இது மிக முக்கியமான சான்றிதழ் ஆகும். 

அவசர சூழ்நிலைக்கு இந்த நான் டிரேசபிள் சர்டிபிகேட்டை நாம் உபயோகப்படுத்த முடியும். ஆனால் நேர்காணல் போன்றவற்றிற்கு செல்லும்போது இவற்றை உபயோகப்படுத்த முடியாது.

இந்த நான் டிரேசபிள் சர்டிபிகேட்டை பயன்படுத்தி நாம் நமது நகல் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இந்த என்டிசி சான்றிதழ் தற்காலிகமாகவும் நாம் தொலைத்த சான்றிதழை திரும்ப பெறுவதற்கும் உதவுகிறது.

இதில் அடுத்தபடியாக நாம் நமது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தாசில்தாரிடம் இந்த என்டிசி சான்றிதழை காட்டினால் அவர் ஒரு ஆவணத்தை நமக்கு தருவார். 

அது ஆர்டிஓ மற்றும் விஏஓ விசாரணைக்கு செல்லும். அவர்கள் நமது விவரங்களை சேகரித்து கொடுப்பார்கள் அந்த ஒப்புதலையும் பெற்றுக்கொண்டு நமக்கு தேவையான சான்றிதழ் வாங்கிய இடத்தில் அதாவது பள்ளி சான்றிதழ்களை தொலைத்திருந்தால் பள்ளிக்கு சென்று இதை காட்ட வேண்டும். கல்லூரி சான்றிதழ்களை தொலைத்திருந்தால் கல்லூரிகளுக்கு சென்று இதை காட்ட வேண்டும்.

பிறகு சான்றிதழில் உள்ள ஒரு சில தகவல்களை விண்ணப்பமாக எழுதி அவர்களிடம் தர வேண்டும். குறிப்பாக சான்றிதழின் நகல் இருந்தால் அதையும் இணைக்கலாம். அது அவர்களுக்கு சான்றிதழை தேடி எடுப்பதற்கு உபயோகமாக இருக்கும்.

நமக்கு எந்த சான்றிதழ்கள் வேண்டுமோ அதற்கேற்ற படி ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நாம் அரசு கரூவூலத்தில் செலுத்த வேண்டும். பின்னர் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் இருந்து இந்த ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பிவைப்பார்கள்.

பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு நமக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் நாம் வாங்கவில்லை என்றால், இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நம் ஆதார் கார்டில் உள்ள முகவரிக்கு அவர்களே அனுப்பி வைத்துவிடுவார்கள்.

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களில் சான்றிதழ்களை தொலைத்து விட்டோம் என்று www.tnsevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். அதேபோல் இதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு இடத்திற்கும் நிறைய அலைய வேண்டியதும் இருக்கும். எனவே, சான்றிதழ்களை நாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்