பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை.. தாய், தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை
பல்லடம் அருகே தாய், தந்தை மகன் மூவரும், அடித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை தாய் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்லடம் அருகே தாய், தந்தை மகன் மூவரும், அடித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை தாய் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. இவர் தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு உடன் தங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் தங்கி வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 3 பேரும் உறங்கி உள்ளனர்.
3 பேர் படுகொலை
அப்போது தோட்டத்து பகுதியில் சப்தம் கேட்டதால் தெய்வசிகாமணி முதலில் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் தெய்வசிகாமணியை வெட்டி கொலை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற கும்பல் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில் குமார் மற்றும் அலமாத்தாள் இருவரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை செந்தில்குமார் ஏற்கனவே வரச்சொல்லியிருந்த சவரத்தொழிலாளி வீட்டில் வந்து பார்த்த போது மூவரும் படுகாயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவினாசிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு பல்லடம் காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சடலங்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தெடர்ந்து காவல் துறையினர் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரியவந்தது.
எனவே கொள்ளைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
கொலை நடந்த இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தும் மோப்ப நாய் மூலம் தோட்டப்பகுதிகளில் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் 8 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.மேலும் பொருட்கள் கொள்ளை போயுள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இந்நிலையில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டு எட்டு சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் ஐந்து தனி படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருவாதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
இந்த கொலை சம்பவத்தை ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தொடர்புடையை செய்திகள்