மக்களே உஷாரா இருங்க.. இந்த 9 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்ட போகுதாம்.. இடி, மின்னல், பலத்த காற்றுடன் கொட்டுமாம்!
Heavy rain : காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மக்களே உஷாரா இருங்க.. இந்த 9 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்ட போகுதாம்.. இடி, மின்னல், பலத்த காற்றுடன் கொட்டுமாம்!
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):
அதிகபட்ச வெப்பநிலை :- கரூர்பரமத்தி மற்றும் பாளையங்கோட்டை: 38.0° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 19.0° செல்சியஸ்