Weather Update Today: பலத்த காற்று வீசும்..! ஆகஸ்ட் 7 வரை தொடரும் மழை, நீலகிரிக்கு அலார்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்
பலத்த காற்று வீசும், ஆகஸ்ட் 7 வரை தொடரும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீலகிரியில் மிக கனமழை இருக்கும் எனவும் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7 வரை பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 2) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 7 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகரியில் கனமழை தொடரும்
நீலகிரி மாவட்டத்தில் வரும் 3 நாள்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகரியில் கடந்த ஜூன் 1 முதல் தற்போது 453.8 மில்லி மீட்டர். மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவைவிட 2% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இடி மின்னலுடன் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்ற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகள்
02.08.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.08.2024: மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை
சமவெளிப்பகுதிகளை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமானநிலையம் : 40.6 ° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு: 19.0 ° செல்சியஸ்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்