TNPSC Group 4 Hall Ticket: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc Group 4 Hall Ticket: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

TNPSC Group 4 Hall Ticket: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

Kathiravan V HT Tamil
May 27, 2024 07:16 PM IST

இணைய தளங்களான www.tnosc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TNPSC Group 4 Hall Ticket: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
TNPSC Group 4 Hall Ticket: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

குரூப் 4 தேர்வுகள் 

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது. 

இது தொடர்பாக அப்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர். தனி செயலாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப் 4 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 9ஆம் தேதி தேர்வு 

வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 28ஆம் தேதி கடைசிநாள் என்றும்  காலை 9.30 மணிக்கு நடைபெறும் தேர்வானது பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது

ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் ஒரு முறை பதிவில் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு திருத்தங்களை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்ப்பட்டது. 

என்னென்ன பணியிடங்களுக்கு தேர்வு 

இதில் தமிழ்நாடு வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.

குரூப் 4 தேர்வு

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 01/2024. நாள் 30.01.2024 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேரவுககூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnosc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு மையங்களில் கட்டுப்பாடு 

தேர்வு நடைபெறும் இடத்தில், அனுமதிக்கப்பட்ட எழுதும் பொருளான கருப்பு-மை பால்பாயிண்ட் பேனா தவிர, வேறு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிஉ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுலார் ஃபோன்கள், கால்குலேட்டர்கள், கைக்கடிகாரங்கள், உள்ளடிக்கிய நினைவகத்துடன் கூடிய மோதிரங்கள் புளூடூத் சாதனங்கள், தகவல் தொடர்பு சில்லுகள், ரெக்கார்டிங் சாதனங்கள் தனி துண்டு உள்ளிட்ட எந்த பொருட்களும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து ஆட்சேர்ப்புகளும் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலானவை என்றும் நியாமற்ற வழிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.