தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gokulraj Murder Case: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு.. மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

Gokulraj Murder Case: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு.. மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

Divya Sekar HT Tamil
Jun 02, 2023 10:37 AM IST

கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாகும் வரையிலா ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு
கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 19 பேரை கைது செய்தனர். அதன்படி யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ், அமுதரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் 2 பேர் மரணம் அடைந்தனர். எஞ்சிய 15 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்ட இவ்வழக்கு முதலில் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த ஆண்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து யுவராஜ் உள்பட 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியம் அளித்த நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் 4 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பு வழங்குகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point