தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Twitter Blue Tick: முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி வரை ப்ளுடிக்கை இழந்த பிரபலங்கள்!

Twitter Blue Tick: முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி வரை ப்ளுடிக்கை இழந்த பிரபலங்கள்!

Karthikeyan S HT Tamil
Apr 21, 2023 08:24 AM IST

Twitter Blue Tick: இந்தியாவில் சந்தா செலுத்தாவர்களின் கணக்குகளில் ப்ளு டிக்கை நீக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின், ட்விட்டர் ப்ளு டிக், நடிகர் ரஜினி.
முதல்வர் ஸ்டாலின், ட்விட்டர் ப்ளு டிக், நடிகர் ரஜினி.

ட்ரெண்டிங் செய்திகள்

உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். ட்விட்டரை கையகப்படுத்தியது முதல் அந்த தளத்தில் தனது விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் (Blue Tick) ப்ளூ டிக் பெற்ற பயனர் அக்கவுண்ட்களில் இருந்து சந்தா வசூலிப்பது. ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பெரிய நிறுவனங்கள் தங்களுக்கென தனி பேஜ்ஜை நிர்வகிப்பார்கள். அதில், அவர்களை பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகளை பகிர்வார்கள். இதுபோன்ற பக்கங்கள் அவர்களுடையதுதான் என நாம் தெரிந்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி அந்த பக்கம் வெரிஃபை அதாவது ப்ளு டிக் (Blue Tick) செய்யப்பட்டிருப்பதை வைத்துதான்.

முன்னதாக, ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது ட்விட்டர். இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த வசதியை பெற்று வந்தனர். இந்த சூழலில் ப்ளூ டிக் சந்தாவை மேற்கூறிய இந்த அங்கீகரிக்கப்பட்ட பிரபலங்களும் செலுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் சந்தா செலுத்தாவர்களின் கணக்குகளில் ப்ளு டிக்கை நீக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய அலுவலக கணக்கில் கிரே கலர் டிக் இருக்கிறது. அது போல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பக்சன், விஜய், சிலம்பரசன், கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் செல்போன் செயலியில் மாத சந்தாவான ரூ 900 கட்டணம் செலுத்தாததால் ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளுக்கு 'ப்ளூ டிக்' சந்தா அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்