Maha Kavithai: ’தொல் காப்பியருக்கு முந்தைய தமிழர்கள்!’ வியக்க வைத்த ப.சிதம்பரத்தின் பேச்சு!
”Maha Kavithai: கற்றல் கற்பித்தல்தான் மானுடத்தை இயக்கும் சக்தி, அதை போலத்தான் தான் கற்றதை நமக்கு கற்பிக்கும் பேராசிரியராக வைரமுத்து அவர்கள் மாறி இருக்கிறார்”
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மகாகவிதை’ நூலின் முதல் பிரதியை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், 2500 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த தொல்காப்பியர் காலந்த்தில் டெலஸ்கோப் கிடையாது, செயற்கைகோள் கிடையாது, விண்கலம் கிடையாது. ஆயினும் தொல்காப்பியர் தான் அறிந்த உண்மைகளை சொன்னார். நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று சொன்னார். தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழர்கள் இந்த உண்மைகளை அறியத் தொடங்கினர்.
ஆறாவது பூதம் என்று ஒன்றும் கிடையாது. தொல்காப்பியருக்கு பின்னர் வந்த புலவர்கள் இது குறித்து பாடினார்கள்.
சராசரி இந்தியனின் வயது ஏறத்தாழ 70 ஆக உள்ளது. குரங்கில் இருந்து பிறந்தான் மனிதன் என்பதுதான் நமக்கு தெரிந்த பரிணாம வரலாறு. ஆனால் இந்த மூன்று சொற்களில் மட்டும் பரிணாம வரலாறு அடங்கி விடாது என்கிறது மகா கவிதை.
450 கோடி ஆண்டுகளாக இந்த மண் உருண்டை சுழல்கிறது. இந்த சுழற்சிதான் பரிணாமத்தின் தொடக்கம் என்கிறார் கவிஞர்.
கற்றல் கற்பித்தல்தான் மானுடத்தை இயக்கும் சக்தி, அதை போலத்தான் தான் கற்றதை நமக்கு கற்பிக்கும் பேராசிரியராக வைரமுத்து அவர்கள் மாறி இருக்கிறார்.
திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான் சிறப்பை ஏன் வைத்தார் என்று கவிஞரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்கிறார். முதல் அதிகாரம் கிழிந்துவிட்டால் மழையே கடவுளாகும் என கவிஞர் கூறுகிறார். மகாகவிதை ஒருமுறை படித்தால் புரியாது, ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு படிப்பதுபோல் படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறினார்.
டாபிக்ஸ்