தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Former Minister Sellur Raju's Question In The Tamil Nadu Legislative Assembly Regarding Kilambakkam Bus Stand

Sellur Raju: ’கிளாம்பாக்கமா? கேளம்பாக்கமா?’ கன்பீயூஸ் ஆன செல்லூர் ராஜூ! பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Feb 13, 2024 12:52 PM IST

“Kilambakkam Bus Stand: செல்லூர் ராஜூ அண்ணன் வந்தால் நானும், சேகர்பாபுவும் கிளாம்பாக்கத்திற்கு அழைத்து செல்கிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகளை முழுமையாக சுற்றிக்காட்டுகிறோம்.”

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ கூறுகையில், மாண்புமிகு உறுப்பினர்களுக்கு புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேளம்பாக்கம் புது பேருந்து நிலையத்தை திறந்ததால் மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. பேருந்துகளை அதிகப்படுத்தி தரணும், படிக்காதவர்கள் தென்மாவட்டங்களில் வேலை கேட்டு வர்ராங்க, தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை ஏற்கெனவே இருக்கும் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டால் நல்லா இருக்கும். மக்கள் உண்மையிலேயே சிரமப்படுறாங்க, மாண்புமிகு முதலமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என பேசினார். 

இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அண்ணன் செல்லூர் ராஜூ அவர்களுக்கு முதலில் மிக்க நன்றி, தை முதல்நாளை புத்தாண்டாக ஏற்று வாழ்த்து சொன்னார். அண்ணனை பார்த்தாலே மொத்த சபைக்கும் ஆனந்தம் வரும். புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது கேளம்பாக்கம் அல்ல; கிளாம்பாக்கம். கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது உங்கள் ஆட்சியில்தான். 

30% நீங்கள் விட்டுச்சென்ற பணியை எடுத்து செய்துள்ளோம். ஏற்கெனவே பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்றும் போது நிறைய குறைகள் இருந்தது, விமர்சனம் இருந்தது. பேருந்தில் பயணிக்கிறவர்கள் யாரும் இது குறித்து பிரச்னை எழுப்பவில்லை, பேருந்திலேயே பயணிக்காத அண்ணனை போன்றவர்கள்தான் இதை ஒரு பிரச்னையாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். 

முதலமைச்சர் உத்தரவுப்படி கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 20% பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், 80% பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. 

கிளாம்பாக்கம் முழுமையாக செயல்படத் தொடங்கிவிட்டது. தென்மாவட்டங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் மக்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள்.  செல்லூர் ராஜூ அண்ணன் வந்தால் நானும், சேகர்பாபுவும் கிளாம்பாக்கத்திற்கு அழைத்து செல்கிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகளை முழுமையாக சுற்றிக்காட்டுகிறோம். அது குறித்து குறை சொன்னாலும் அதனை தீர்க்கிறோம். 

WhatsApp channel

டாபிக்ஸ்