Jayakumar : ‘தோனிக்கு பதில் கேப்டனாக்குங்க..’ ஓபிஎஸ் கோரிக்கை வைத்ததாக ஜெயக்குமார் கிண்டல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jayakumar : ‘தோனிக்கு பதில் கேப்டனாக்குங்க..’ ஓபிஎஸ் கோரிக்கை வைத்ததாக ஜெயக்குமார் கிண்டல்!

Jayakumar : ‘தோனிக்கு பதில் கேப்டனாக்குங்க..’ ஓபிஎஸ் கோரிக்கை வைத்ததாக ஜெயக்குமார் கிண்டல்!

Divya Sekar HT Tamil
May 07, 2023 06:20 PM IST

சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் தற்போது தோனிக்கு பதிலாக தன்னை சென்னை அணிக்கு கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார் என டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்ததது. சிஎஸ்கே அணி தரப்பில் மத்தீஷ பத்திரனா 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு, சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தி இருக்கிறது. இதனிடையே, சேப்பாக்கம் மைதானம் முழுவதிலும் சென்னை ரசிகர்கள் கூடி மஞ்சள் சட்டை, விசில் சத்தத்துடன் ஆர்பரித்து காணப்பட்டனர். இந்தப் போட்டியை பிரபலங்கள் பலரும் நேரில் பார்த்து ரசித்துள்ளனர்.

சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மைதானத்தில் திறந்து வைத்த கலைஞர் கருணாநிதி கேலரியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை - மும்பை போட்டியை நேரி்ல கண்டு களித்தார். ஆனால், இந்த போட்டி முடிந்த சில நிமிடங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் கேலரியில் இருக்கும் உள் அறையில் சந்தித்து பத்து நிமிடங்கள் பேசி இருக்கிறார்.

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்துடன் தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய சபரீசன் அதன் பிறகு அவருடன் தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பை நடத்தி இருக்கிறார். ஏற்கனவே ஓபிஎஸ் திமுகவின் 'பி' டீம் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், பரபரப்பாக நடந்த கிரிக்கெட் போட்டிக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த புகைப்படங்களை பகிர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு எனக் குறிப்பிட்டும் இரண்டாவது புகைப்படத்தில், “ஓபிஎஸ் தற்போது தோனிக்கு பதிலாக தன்னை சென்னை அணிக்கு கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்” என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.