தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dgp Rajesh Das Arrest : பீலா வெங்கடேஷ் புகார் எதிரொலி.. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!

DGP Rajesh Das Arrest : பீலா வெங்கடேஷ் புகார் எதிரொலி.. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!

Pandeeswari Gurusamy HT Tamil
May 24, 2024 12:33 PM IST

DGP Rajesh Das Arrest : முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தண்டனை பெற்றுள்ளார் . இந்நிலையில் ராஜேஷ் தாஸ் தனது முன்னாள் மனைவி பீலா ராஜேஷ் வீட்டில் அத்துமீறி நுழைந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீலா வெங்கடேஷ் புகார் எதிரொலி.. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!
பீலா வெங்கடேஷ் புகார் எதிரொலி.. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!

ட்ரெண்டிங் செய்திகள்

பீலா வெங்கடேசன் புகார்

தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கி விட்டு 10 பேருடன் சேர்ந்து அத்துமீறி நுழைந்து மிரட்டி விட்டு சென்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் தனது முன்னாள் கணவரும் முன்னாள் டிஜிபியுமான ராஜேஷ் தாஸ் மீது புகார் அளித்தார். விவாகரத்து விசாரணை விவகாரம் தொடர்பாக பீலா வெங்கடேசன்  வீட்டிற்கு சென்று ராஜேஷ் தாஸ் பிரச்சனை செய்ததாக தகவல் வெளியானது. 

ராஜேஷ்தாஸ் கைது

இந்த நிலையில் பீலா வெங்கடேஷன் புகாரின் பேரில் விசாரணையை தொடக்கிய கேளம்பாக்கம் காவல்துறையினர் இன்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார்

தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சரின் பணிக்கான சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பு விசாரணைக்கு பிறகு, கடந்த ஜூன் 16ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதமும், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸின் இந்த நடவடிக்கைக்கு துணையாக இருந்த புகாரில் செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்த கண்ணனுக்கு 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பியான கண்ணன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கினை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை கடந்த ஜூன் 9ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், "குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மேலும் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த 3 ஆண்டு சிறை, 20 ஆயிரம் அபராதத்தை நீதிபதி உறுதி செய்தார். அதே போல் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கும் 500 ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்தது.

விவாகரத்து முடிவை எடுத்த பீலா ராஜேஷ் 

இதற்கிடையில் ராஜேஷ்தாஸின் மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான பீலாராஜேஷ் விவாகரத்து செய்யும் முடிவு எடுத்தார். மேலும் பீலா ராஜேஷ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்