தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mgr106: ‘வீட்டை இழக்க இருந்தவருக்கு நாட்டை கொடுத்த மக்கள்’ இது தான் எம்.ஜி.ஆர்!

MGR106: ‘வீட்டை இழக்க இருந்தவருக்கு நாட்டை கொடுத்த மக்கள்’ இது தான் எம்.ஜி.ஆர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 17, 2023 07:03 AM IST

HBD MGR: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளான இன்று, அவரது நினைவுகளை பகிர்ந்த ரசிகர்களின் பதிவுகளில் இது முக்கியமான பதிவு.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,   -கோப்புபடம்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., -கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

"தோட்டத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்" என்று. இடி போன்ற அந்தச்செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர்.

"என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற உதவியாளர் கேட்க, ‘‘பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்’’ என்று எதிர் கேள்வி கேட்டார் செம்மல். ‘‘ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்" என கேட்டுள்ளார் உதவியாளர். ‘‘என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான். உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை, அவருடை  சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க. 'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்று அவரிடம் நான் கூறினேன். அவ்வளவு தான், மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய்(1972-இல்).

நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு, அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துவிட்டது. இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்" என, சலனமில்லாமல் சொன்னவர், சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.

"எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?" என உதவியாளர் கேட்க, "வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும். ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை? எனக்கு குடிசையிலும் வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.

என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க. எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும். ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" என்று சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.

"அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே" என்று கூறியவர், அந்த வகையில் உருவானது தான் நீதிக்கு தலைவணங்கு படம். எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது.

எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால் 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்,’’
என்று ஜெயந்த் பிரபாகர் என்பவர் எழுதிய பதிவை, பல எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்