Evening Top 10 news: ’கொலை களமாக மாறிய தமிழகம்! ஒலிம்பிக்கில் அசத்திய இந்திய ஹாக்கி அணி!’ மாலை டாப் 10 செய்திகள் இதோ!
Evening Top 10 News: தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
Evening Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வயநாட்டில் உணவு சமைக்க கட்டுப்பாடு
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6ஆவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. வயநாட்டில் மீட்புபடையினருக்கு உணவு சமைத்து கொடுக்க தன்னார்வலர்களுக்கு தடைவிதிப்பு, அனுமதிக்கப்பட்ட இடங்களில் சேவை செய்ய அறிவுறுத்தல். வயநாட்டில் ஒரே இடத்தில் 127 உடல்களை பிரதேத பரிசோதோனை நடைபெற்றது.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் ஓய்வு பெற்று உள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி ஆர்.தினகரன் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தலைமை காவல் படைப்பிரிவின் ஐஜியாக இருந்த டி.செந்தில் குமார் மேற்கு மண்டல ஐஜியாக நியமனம். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த கே.புவனேஸ்வரி ஐபிஎஸ், தலைமை காவல் படைப்பிரிவு ஐஜியாக நியமனம்.
8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
’கொலைக்களமாக மாறிய தமிழகம்’
திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்கலமாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது என ட்வீட்
விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேரு காலனி மற்றும் ஆனந்தன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன், மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சைகாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் புதிய பேருந்து சேவை தொடக்கம்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் , 66.15 கோடி ரூபாய் மதிப்பிலான 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் இயக்கத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நெல்லைக்கு புதிய மேயர் வேட்பாளர்
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த நிலையில், புதிய மேயர் வேட்பாளராககிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வ செய்யப்பட்டு உள்ளார்.
10.5% வன்னியர் இட ஒதுக்கீடு
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு, 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்றவற்றில், 14% மக்கள்தொகை கொண்ட வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் இன்னும் 5 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. ஆனால், வெறும் 6.77% மக்கள்தொகை கொண்ட பிற மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கான பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உள்ளது. ஆனால், இந்த உண்மையை வெளியிடாமல் வன்னியர் பிரதிநிதித்துவம் அதிகரித்து விட்டதாக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு என பாமக வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு.
ஒலிம்பிக் - அரையிறுத்திக்கு முன்னேறிய இந்திய அணி
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 1972-ம் ஆண்டுக்கு பிறகு முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
போராடி தோற்ற லக்ஷயா சென்
ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதியில் லக்ஷயா சென் போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும் வெண்கலப் பதக்கத்துக்காக போட்டியிடுகிறார். 22 வயதான அவர் ஞாயிற்றுக்கிழமை நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்செல்சனிடம் மோதிய போடியில் தோல்வி அடைந்தார். வெண்கலப் பதக்கத்திற்கான பிளேஆஃபில் மலேசியாவின் லீ ஜி ஜியாவுடன் அவர் மோத உள்ள நிலையில், வெற்றி பெற்றால் வெண்கல பதக்கம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.