ADSP Velladurai : என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை சஸ்பெண்ட்.. பணி ஓய்வு பெற இருந்த நிலையில் நடவடிக்கை!
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை சஸ்பெண்ட். 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எனக் கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பணி ஓய்வு பெற இருந்த நிலையில் ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரையை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை தமிழ்நாடு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
திடீரென பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக வெள்ளத்துரை பணியாற்றி வந்த நிலையில் திடீரென அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தவர் தான் வெள்ளை துறை. இவர் தற்போது ஏ.டி.எஸ்.பி.யாக திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற அலுவலக காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார். காவல்துறையினர் இவரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கிறார்கள்.
12 என்கவுண்டர்
இவரின் 30 ஆண்டுகால பணிகளில் இவர் கிட்டதட்ட 12 என்கவுண்டர்களை செய்து இருக்கிறார். இதில் முக்கியமாக கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் பிரபல தாதாவாக இருந்த அயோத்தி குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தார். அதேபோல கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகமே மிக முக்கியமாக பார்க்கப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டரில் மிக முக்கிய பங்காற்றியவர் வெள்ளதுரை.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்த போது ஒரு காவல் நிலைய மரண வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில் முடிவில் தான் பனியிலிருந்து ஏடிஎஸ்டியாக ஓய்வு பெற இருந்த வெள்ளதுரை தற்போது பணியினை நீக்கம் செய்யப்பட்டார்.
வெள்ளதுரை சஸ்பெண்ட்
இந்தநிலையில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளைத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில் ராமு (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் வெள்ளத்துரை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை இன்றோடு ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்புப் படை கண்காணிப்பாளராக வெள்ளதுரை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வெள்ளதுரை.
சப் இன்ஸ்பெக்டர்களை குத்திய ரவுடிகள் என்கவுண்டர்
கடந்த 2013 ஆம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் வெள்ளதுரை டீம் என்கவுண்டர் செய்தனர். மதுரையில் சப் இன்ஸ்பெக்டர்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியிலும் வெள்ளத்துரை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9