RIP RM Veerappan: RM வீரப்பன் நினைச்சாதான் எம்.ஜி.ஆரை பார்க்க முடியுமா?; அப்படி என்ன உறவு? - உருட்டுகளை உடைத்த வரதராஜன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Rm Veerappan: Rm வீரப்பன் நினைச்சாதான் எம்.ஜி.ஆரை பார்க்க முடியுமா?; அப்படி என்ன உறவு? - உருட்டுகளை உடைத்த வரதராஜன்!

RIP RM Veerappan: RM வீரப்பன் நினைச்சாதான் எம்.ஜி.ஆரை பார்க்க முடியுமா?; அப்படி என்ன உறவு? - உருட்டுகளை உடைத்த வரதராஜன்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 12, 2024 06:04 AM IST

எம்ஜிஆர் அவருடைய பர்சனல் சார்ந்த முடிவுகளையெல்லாம் அவரேதான் எடுத்தார். எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்றால், ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆருக்கு என்று சில உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று தான் எம்ஜிஆரை பார்க்கவே முடியும்.

ஆர்.எம்.வீரப்பன் மறைவு!
ஆர்.எம்.வீரப்பன் மறைவு!

இந்த நிலையில் அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த உறவு குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், வழக்கறிஞருமான வரதராஜன் ஆதன் தமிழ் சேனலுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பேசி இருந்தார். அந்த பகிர்வை இங்கே பார்க்கலாம். 

அவர் பேசும் போது, “ஆர்.எம். வீரப்பன் எம்ஜிஆருக்கு மிகவும் நேர்மையாக இருந்தார். குறிப்பாக பண விஷயத்தில்… ஆனால் ஆர்.எம். வீரப்பன் நினைத்தால்தான் எம்ஜிஆர்- யை பார்க்க முடியும் என்று சொல்வதெல்லாம் பொய். 

 

எம்ஜிஆர் அவருடைய பர்சனல் சார்ந்த முடிவுகளையெல்லாம் அவரேதான் எடுத்தார். எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்றால், ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆருக்கு என்று சில உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று தான் எம்ஜிஆரை பார்க்கவே முடியும். 

எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு, அவருக்கென்று பர்சனலாக சில உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்கள் நினைத்தால் தான் அப்போது எம்ஜிஆரை பார்க்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. 

ஜானகியின் ஆதரவில் ஆர்.எம். வீரப்பன்!

ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரையில் அவரின் சினிமா சார்ந்த வேலைகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார். எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஆர்.எம் வீரப்பனை அழைத்து தன்னுடன் மருத்துவமனையில் வைத்துக்கொண்டார். 

அப்போதுதான் ஆர்.எம். வீரப்பன் விஎன் ஜானகி அவர் சார்பில் சில முக்கியமான முடிவுகளை எடுத்தார். ஜானகியும், நீண்ட காலமாக தனது கணவருடன் ஆர்.எம் வீரப்பன் இருந்ததால் அவரை தன்னுடன் வைத்துக் கொண்டார். 

எம்ஜிஆர் ஆர்எம் வீரப்பனை சத்யா மூவிஸ் நிறுவனம் சார்ந்த வேலைகளை பார்க்கவும், மேலாளராகவும் மட்டுமே வைத்துக்கொண்டிருந்தார். அரசியல் ஆட்டத்தில், விஎன் ஜானகி உள்ளே வந்த பின்னர் தான் ஆர்.எம். வீரப்பனின் கை ஓங்கியது. 

எம்ஜிஆர் இறந்த பொழுது ஆர் எம் வீரப்பனிடம் விஎன் ஜானகி ஜெயலலிதாவை உள்ளே விடக்கூடாது என்று சொல்லி வைத்திருந்தார். வீரப்பனும் அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தார். ஆனால், அதையும் மீறி ஜெயலலிதா உள்ளே வந்து விட்டார். ஆகையால், ஆர்.எம் வீரப்பனை கேட்டு தான் எம்ஜிஆர் எல்லா விஷயங்களையும் செய்தார் என்பதில் உண்மை இல்லை” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.