’கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா?’ வரேன் 234 தொகுதிக்கும்! ஆட்டத்தை தொடங்கிய ஈபிஎஸ்!
தேர்தல் நேரத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி நிச்சயம் அமையும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதையே சொன்னேன் என்று உங்களில் பலர் நினைக்க கூடும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது பேசிய அவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 359 வாக்குகள் குறைவாக பெற்றதால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதமே உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவித்துவிடுவார்கள். இந்த 14 மாதகால உழைப்புதான் தேர்தலில் வெற்றியை கொடுக்கும். கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபவதை பொறுத்தே நமக்கு வெற்றி வாய்ப்பு அமையும்.
திமுகவை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் விரோத ஆட்சி என்று முடிவு செய்துவிட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களை சந்திக்கவே அமைச்சர்கள் பயப்படுகிறார்கள்.