தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Drinking Water Shortage Will Be Solved In Coimbatore In 2 Months - Minister Kn Nehru's Reply In Tamil Nadu Legislative Assembly

’2 மாதங்களில் கோவை மாநகரில் குடிநீர் பஞ்சம் தீரும்’ அமைச்சர் கே.என்.நேரு பதில்

Kathiravan V HT Tamil
Apr 01, 2023 10:41 AM IST

பில்லூர் 3ஆவது திட்டம் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் கோவைக்கு மட்டும் வர உள்ளது - நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோ தங்கராஜ் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்காக 10 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட 8 நீர்த்தேக்க தொட்டிகளும், புதியதாக தெருக்களுக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகளும் முடிவடைந்தாக தெரிய வருகிறது. எனவே 24 மணிநேரமும் தங்குதடையற்ற குடிநீர் எப்போது வழங்கப்படும் என சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு. கோவையில் பில்லூர்-1, பில்லூர்-2 மற்றும் சிறுவாணி அகிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் கேரளாவில் இருந்து வரும் சிறுவாணி குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை, குறைவாக உள்ளது. எனவே பில்லூர்-3 திட்டம் தொடங்கப்பட்டு வேலை முடிந்தாலும் சில இடங்களில் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். நிலம் கிடைக்காததால் பணிகள் தாமதம் ஆனது.

கோவை சென்று நில உரிமையாளரை சந்தித்து நிலத்தை வாங்கி கொடுத்து பணிகள் நடந்து வருகிறது. தற்போது 6 கி.மீ மட்டும் பைப் பதிக்கும் பணி நடக்கிறது. 2 மாதங்களில் வேலை முடிந்து பில்லூர் 3ஆவது திட்டம் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் கோவைக்கு மட்டும் வர உள்ளது. இரண்டே மாதங்களில் கோவையின் முழு குடிநீர் பஞ்சமும் தீரும் என உறுதி அளித்தார்.

WhatsApp channel

டாபிக்ஸ்