DMK vs BJP: ’6 ஆயிரம் மோடி பணமா?’ வாழை பழ காமெடியை சுட்டிக்காட்டி விளாசும் முரசொலி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Bjp: ’6 ஆயிரம் மோடி பணமா?’ வாழை பழ காமெடியை சுட்டிக்காட்டி விளாசும் முரசொலி!

DMK vs BJP: ’6 ஆயிரம் மோடி பணமா?’ வாழை பழ காமெடியை சுட்டிக்காட்டி விளாசும் முரசொலி!

Kathiravan V HT Tamil
Jan 02, 2024 08:30 AM IST

”தமிழ்­நாடு உள்­பட அனைத்து மாநில நிதி ஆதா­ரங்­க­ளும் சுரண்­டப்­பட்டு சுருட்­டப்­ப­டு­கின்­றன என்­பது மட்­டுமே உண்மை ஆகும். இத்­த­கைய கார்ப்­ப­ரேட் முத­லை­கள் வேண்­டு­மா­னால், ‘இது மோடி பணம்’ என்று சொல்­லிக் கொள்­ள­லாம்”

வாழை பழ காமெடியை சுட்டிக்காட்டி முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது
வாழை பழ காமெடியை சுட்டிக்காட்டி முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வரும் நிலையில் முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், கவுண்­ட­மணி -–- செந்­தில் வாழைப்­ப­ழக் காமெ­டி­யைப் பார்த்­தது தமிழ்­நாடு.

‘ஒரு பழம் இங்க இருக்கு... இன்­னொரு பழம் எங்க?’ என்று கேட்­பார் கவுண்­ட­மணி.

‘அது தான்ணே இது’ என்­பார் செந்­தில்.

ஒன்­றிய அர­சி­டம் நிதி கேட்­டால், ‘நீங்­கள் செலவு செய்­யும் பணம் எல்­லாம் எங்­கள் பணம் தான்’ என்று சொல்கிறார்கள். மாநில அர­சு­க­ளி­டம் இருந்து பணத்தை வசூ­லித்து எடுத்­துச் செல்­லும் ஒன்­றிய அரசு, மாநில அரசுக்கு அள்­ளி­யும் தரு­வது இல்லை, கிள்­ளி­யும் தரு­வது இல்லை. ஆனால் எள்ளி மட்­டும் நகை­யா­டு­கி­றது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் சீர­மைப்பு மற்­றும் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக தற்­கா­லிக நிவா­ர­ணத் தொகை­யாக 7,033 கோடி ரூபா­யும், நிரந்­தர நிவா­ர­ணத் தொகை­யாக 12,659 கோடி ரூபா­யும் முத­ல­மைச்­சர் அவர்கள் கோரி உள்­ளார்­கள். திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, தென்­காசி மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் இன்­னும் முழு­மை­யாக அள­வி­டப்­ப­ட­வில்லை. எனவே, அவ­சர நிவா­ரண நிதி­யாக 2 ஆயி­ரம் கோடி ரூபாய் தர­வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் அவர்­கள் பிர­த­ம­ரி­டம் கோரி­யுள்­ளார்­கள். ஆக மொத்­தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்­நாடு அர­சால் ஒன்­றிய அர­சி­டம் கேட்­கப்­பட்­டுள்­ளது. இந்த பணத்தை அவர்­கள் தரத் தயா­ராக இல்லை.

அதற்­காக மக்­களை காத்­தி­ருக்க வைக்க முடி­யுமா? சென்னை, காஞ்­சி­ பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் மாவட்­டங்­க­ளில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 6 ஆயி­ரம் ரூபாயை குடும்ப அட்டை அடிப்­ப­டை­யில் தரச் சொல்லி விட்­டார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இதற்கு மட்­டும் 1,486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்­கீடு செய்­துள்­ளது. இது 24 லட்­சத்து 25 ஆயி­ரம் குடும்பங்களுக்கு பய­ன­ளிக்­கும் வகை­யில் அமைந்துள்ளது.

புயல் மழை­யால் சாலை­கள், பாலங்­கள், பள்­ளிக் கட்டடங்கள், அரசு மருத்­து­வ­ம­னை­கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்­பங்­கள், பழு­த­டைந்த துணை மின் நிலை­யங்­கள் குடி­நீர் தொட்­டி­கள், தெரு விளக்குகள், கிரா­மச் சாலை­கள் ஆகி­ய­வற்றை சீர் செய்திட வேண்­டும். அதற்­கும் நிதி அதி­கம் தேவைப்படுகிறது. பொது­மக்­க­ளின் இழப்­பு­க­ளுக்கு நிதி வழங்க வேண்­டும். இவை எதை­யும் மன­தில் கொள்ளவில்லை ஒன்­றிய அரசு. ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 6000 ரூபாய் கொடுத்­தது, இது மோடி பணம் தான் என்று வஞ்­ச­கப் பொய்யை அவிழ்த்து விடத் தொடங்­கி­விட்­டார்­கள்.

24 லட்­சம் பேருக்­குக் கொடுங்­கள் என்று ரூ.1,486 கோடியை ஒன்­றிய அரசு கொடுத்­தி­ருந்­தால்­தான் அது மோடி பணம். தமிழ்­நாடு அரசு தனது கரு­வூ­லத்­தில் இருந்து எடுத்­துத் தரும் பணம் எப்­படி மோடி பணம் ஆகும்? இது மோச­டித் தனம் அல்­லவா?

நமக்கு முத­லில் ரூ.450 கோடி­யும், பின்­னர் ரூ.450 கோடியும் ஒன்­றிய அரசு வழங்கி இருக்­கி­றது. இவை இரண்­டும் மிக்­ஜாம் புயல் பாதிப்­பு­க­ளுக்­கா­கத் தரப்­பட்ட சிறப்பு நிதி அல்ல. வழக்­க­மாக பேரி­டர் காலங்­க­ளில் தருவதற்காக வைத்­தி­ருக்­கும் நிதி­யில் இருந்து எடுத்­துத் தந்­துள்­ளார்­கள். இவை ஏற்­க­னவே ஒதுக்கி வைக்­கப்­பட்டு இருக்­கும் நிதி தானே தவிர –- டிசம்­பர்4,17,18 ஆகிய தேதிகளில், ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்­கா­கத் தரப்­பட்ட நிதி அல்ல. அல்ல.

2015ஆம் ஆண்டு முதல் பேரி­டர்­க­ளி­னால் ஏற்­பட்ட சேதங்களை தற்­கா­லி­க­மாக மற்­றும் நிரந்­த­ர­மாக சீர­மைக்­க­வும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­க­வும் தமிழ்­நாடு அரசு ஒன்­றிய அர­சி­டம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி.

ஒன்­றிய அர­சால் ரூ.5,884.49 கோடி மட்­டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்­நாடு அரசு ஒன்­றிய அர­சி­டம் கோரிய தொகை­யில் 4.61 விழுக்­காடு மட்­டுமே ஆகும். நாம் கொடுக்­கும் பணத்தை கார்­ப­ரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுத்து அவர்­க­ளுக்கு திவால் நோட்­டீ­ஸும் கொடுத்து அழகு பார்ப்­ப­து­தான் பா.ஜ.க.வுக்கு தெரிந்த ஒரே வேலை. இதை தலை­யாட்­டிக் கொண்டு செய்­வ­தற்­கா­கத் தான் நிர்­மலா சீதா­ரா­மன் நிதி அமைச்­ச­ராக ஆக்­கப்­பட்­டுள்­ளார். தமிழ்­நாடு உள்­பட அனைத்து மாநில நிதி ஆதா­ரங்­க­ளும் சுரண்­டப்­பட்டு சுருட்­டப்­ப­டு­கின்­றன என்­பது மட்­டுமே உண்மை ஆகும். இத்­த­கைய கார்ப்­ப­ரேட் முத­லை­கள் வேண்­டு­மா­னால், ‘இது மோடி பணம்’ என்று சொல்­லிக் கொள்­ள­லாம்.

வாழைப்­ப­ழக் காமெடி வந்த படம் ‘கர­காட்­டக்­கா­ரன்’. இவர்­களோ பித்­த­லாட்­டக்­கா­ரர்­கள்! என முரசொலி காட்டமாக விமர்சித்துள்ளது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.