தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: மீண்டும் மோடி வெல்வாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்!

Rajinikanth: மீண்டும் மோடி வெல்வாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்!

Aarthi Balaji HT Tamil
May 29, 2024 12:06 PM IST

Rajinikanth: இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்திடம் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சாரி அரசியல் தொடர்பான கேள்வி கேட்காதீங்க என தெரிவித்தார்.

மீண்டும் மோடி வெல்வாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்
மீண்டும் மோடி வெல்வாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து மந்திருக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.

இமயமலைக்கு புறப்பட்ட ரஜினி

இந்த நிலையில் இன்று காலை இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதில், ஆன்மிப பயணமாக இமயமலைக்கு பயணம் எப்படி உள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பதில் அளித்த ரஜினி, ஒவ்வொரு வருடமும் போகிறேன். கேதர்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு செல்ல போகிறேன்.

மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா?

அடுத்த மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சாரி அரசியல் தொடர்பான கேள்வி கேட்காதீங்க என தெரிவித்தார்.

அடுத்ததாக இசையா.? கவிதையா என்ற போட்டி தமிழ் திரைப்பட உலகில் உள்ளது தொடர்பான கேள்விக்கு அண்ணா நோ கமெண்ட்ஸ் என தெரிவித்தார்.

இமயமலை பயணம்

ஒவ்வொரு வருடமும் ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து முடிந்த பிறகு ஆன்மிக சுற்று பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு திரும்பினார்.

கூலி

ரஜினிகாந்தின் சமீபத்திய படமான கூலி, லோகேஷ் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லை. லோகேஷ் இந்தப் படத்தை தனது பிரபஞ்சத்தில் இருந்து பிரித்து உருவாக்குகிறார். மேலும் ரஜினிகாந்த் வித்தியாசமான மாஸ் அவதாரத்தில் நடிக்க இருப்பதாகவும், ரஜினியின் கேரியரில் இது மிகப்பெரிய ஆக்ஷன் த்ரில்லர் திட்டமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

வேட்டையன்

சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். 

ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமா ஹீரோ ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமான வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட ஷெட்யூலை சமீபத்தில் முடித்திருப்பதால், கூலி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்