DMK MP Abdulla : நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற திமுக எம்.பி அப்துல்லா.. தடுத்து நிறுத்திய CISF பாதுகாவலர்!
நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா CISF பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்கு நேற்று பங்கேற்க சென்ற போது CISF பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தபட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம்
மாநிலங்களவைத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேற்று பிற்பகல் 2:40 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, அங்கு பணியில் இருந்த CISF அதிகாரிகள் தன்னை தடுத்து நிறுத்தி நாடாளுமன்றத்துக்கு தான் வந்ததன் நோக்கம் என்ன என விளக்க வேண்டும் என பணியில் இருந்த CISF பாதுகாவலர்கள் கட்டாயப்படுத்தியதாக அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உள்ள ஒருவரிடம், CISF பாதுகாவலர்களின் இந்த நடத்தையால் தவறு. நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது இதுபோன்ற தவறான நடத்தை இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது ”என்று திமுக எம்பி அப்துல்லா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.