தமிழ்நாடா? கொலை நாடா? கொலைக் குற்றங்களை தடுத்து நிறுத்துவதில் திமுக அரசு தொடர் தோல்வி - எஸ்டிபிஐ கட்சி குற்றச்சாட்டு!
SDPI : அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தும் வகையிலும் மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், தமிழக அரசும், காவல்துறையும் சட்டம்-ஒழுங்கை காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூக மக்களின் பாதுகாவலன் என இந்த அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து அவர்கள் கொலைச் செய்யப்படுவதன் மூலம் இந்த அரசு பாராமுகமாகவே இருக்கிறது என்பது தெரிகிறது. சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாக இந்த அரசு இருக்கிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் நெல்லை மேலப்பாளையத்தில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடந்திவரும் சையது தமீம் என்பவரை அவரின் கடைக்குள் வைத்தே மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி
மக்கள் அடர்த்தி நிறைந்த, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு, சையது தமீம் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பையும், குடும்பத்தினரின் நிலையை கருத்தில்கொண்டு ரூ.50 லட்சம் இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.