DMK Files 3: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ! ரிலீஸ் செய்த அண்ணாமலை!-dmk files 3 bjp state president annamalai released the audio of a raja and jaffar sait talking - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Files 3: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ! ரிலீஸ் செய்த அண்ணாமலை!

DMK Files 3: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ! ரிலீஸ் செய்த அண்ணாமலை!

Kathiravan V HT Tamil
Jan 17, 2024 12:52 PM IST

”2ஜி விசாரணையின் போது சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2G விசாரணையை இப்படித்தான் நடத்தியது என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்”

DMK FILES-3 என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
DMK FILES-3 என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

DMK Files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல் மற்றும் அதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன் வைத்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று முதல் கட்ட DMK Files என்ற பெயரில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கலைஞர் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களின் சொத்து மதிப்புகள் குறித்த பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை வெளியிட்டார்.

’என் மண் என் மக்கள்’ சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக திமுகவினர் மீதான ஊழல் புகார்களை DMK Files - 2 என்ற பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அளித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது DMK Files - 3 என்ற பெயரில் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். இன்று வெளியிட்டுள்ள ஆடியோவில் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் நிறுவனம் குறித்து ஆ.ராசா முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர் சேட்டிடம் பேசுவது போன்ற விவரங்கள் அதில் உள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, 2ஜி விசாரணையின் போது சிபிஐ விசாரணையை திமுக எப்படி கையாண்டது என்பது பற்றிய எங்கள் அம்பலப்படுத்துதலின் தொடர்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

2ஜி விசாரணையின் போது சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2G விசாரணையை இப்படித்தான் நடத்தியது என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.