Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. 13ஆவது சுற்றிலும் முன்னணி வகிக்கும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 13ஆவது சுற்றிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னணி வகிக்கிறார்.

Vikravandi By-Election: கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற நா.புகழேந்தி மரணமடைந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி துவங்கியது.
தீவிரப் பாதுகாப்பில் நடந்து முடிந்த வாக்குப்பதிவு:
கடந்த ஜூன் 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது.
