Education: “அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” எனும் – 7 வார பிரச்சாரத்தை தொடங்கியது CRY நிறுவனம்
இதில் பல்வேறு தரப்புப் பொறுப்பாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம், பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான முக்கியத்துவத்தை மேலோங்கச் செய்து பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண இந்தப் பிரச்சாரம் முயல்கிறது.
CRY – சைல்ட் ரைட்ஸ் அண்ட் யு நிறுவனம், பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், சமூகத்தின் மனப்பாங்கை மாற்றவும் “ அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” என்ற தனது நாடு தழுவிய ஏழு வார பிரச்சாரத்தைத் தொடங்கியது. இதில் பல்வேறு தரப்புப் பொறுப்பாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம், பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான முக்கியத்துவத்தை மேலோங்கச் செய்து பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண இந்தப் பிரச்சாரம் முயல்கிறது.
பெண் குழந்தைகள்
இந்தியா முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெற இயலாத நிலையிலும் மற்றும் அவர்களில் பெரும்பாலானோர் இடைநிலைகல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியை தொடர முடியாத நிலையிலும் இருப்பதை அறவே அகற்ற , அதற்கெதிராக போராட தொடங்கப்பட்ட இந்தியாவின் முன்னணி குழந்தை உரிமை அமைப்பான CRY- சைல்ட் ரைட்ஸ் அண்ட் யு (CRY - Child Rights and You ) நிறுவனம் தனது. “அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” என்ற நாடுதழுவிய ஏழு வார அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த முன் முயற்சியானது, பொது மக்களிடையே பெண் குழந்தைகள் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவும் மற்றும் சமூக மனப்பாங்கை மாற்றியமைத்து , ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலவும் அவர்கள் தங்களது மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்ய உதவ ஒன்றிணைந்து முனைப்போடு செயல்படுவதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில், சென்னை, சேலம், தருமபுரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஆறு மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதிலும் 20 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதன் திட்ட பகுதிகளில் இந்தப் பிரச்சாரம் திங்கள் கிழமை ( ஜூன் 24-ம் தேதி ) அன்று தொடங்கியது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE) 14 வயது வரையிலான அனைத்துப் பிரிவைச் சேர்ந்த இந்தியக் குழந்தைகளுக்கும் ஒரு முழுமையான கல்வியை வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இந்தக் குறிப்பிடத்தக்க சிறப்புச் சட்டம் தனது 15 வது ஆண்டு நிறைவை இந்த ஏப்ரல் மாதம் கொண்டாடும் இந்த நிலையிலும் கூட, அதிகளவிலான குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை அணுகுவதில் கணிசமான அளவில் தடைகளை எதிர்கொள்கின்றனர். 2030 ஆம் ஆண்டிற்குள் . நிலைத்தன்மையோடுடனான வளர்ச்சி இலக்கை (SDG இலக்கு -4) எட்டி அடைவதற்கு இணங்க, தேசிய கல்விக் கொள்கை 2020, ஆனது 18 வயது வரை அனைவருக்கும் முழுமையான சமமான தரமான இலவச கல்வியை வழங்குவதை விரிவாக்கும் நோக்கத்தைக் , கொண்டுள்ளது.
இத்தகைய தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவந்த போதிலும், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (UDISE+) 2021-22 - இடமிருந்து பெறப்பட்ட சமீபத்திய தரவுகள் , இந்தியாவின் ஒவ்வொரு ஐந்து பெண் குழந்தைகளில் வெறும் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உயர்நிலை கல்வியை தொடருகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
அனைவரையும் ஈடுபடுத்துதல்
CRY நிறுவனம், இந்தப் பிரச்சினைகளை நேரடியாக அணுகும் விதமாக, ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. இந்த பிரச்சாரமானது கல்வியில் பாலின வேறுபாடுகளை அறவே களைய, அனைத்து தரப்பை சேர்ந்த பொறுப்பாளர்களையும் ஒன்றிணைத்து ஈடுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
.”இந்தப் பிரச்சாரத்திற்கான அத்தியாவசியமான தேவை குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய CRY நிறுவனத்தின் முதன்மை செயலர் (CEO), பூஜா மார்வா , கூறியது: “ பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண் குழந்தைகளுக்கு உயர்நிலைக் கல்வி வழங்குவதை உறுதி செய்வதில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லை. பெண் குழந்தைகள் ஆரம்பக் கல்விக்கு பின்பும் கல்வியைத் தொடர அவர்களுக்கு ஆதரவளிக்க திட்டவட்டமான இலக்குடன் கூடிய
செயல் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. இதில் பெண் குழந்தைகளின் கல்வி, அவர்களுக்கான நிதி ஆதாரங்கள் , மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, சமூக ஈடுபாடு, மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துதல் ஆகியவன போதுமான அளவில் செய்யப்படுவதும் உள்ளடங்கும். ஆனால் பொது மக்களிடையே பெண் குழந்தைகளின் கல்வி குறித்த மேம்பட்ட விழிப்புணர்வு மற்றும் சமூக ஒத்திசைவை உருவாக்காமல் இவற்றில் எதுவும் சாத்தியமில்லை."
குழந்தை திருமணங்கள் பெண் குழந்தைகளின் இடைநிலைக் கல்வி மீது விளைவிக்கும் நேரடியான தாக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டிய பூஜா கூறியது: “பெண் குழந்தைகளின் தாமதமான திருமணம், தாய் மற்றும் குழந்தையின் மேம்பட்ட நலம் மற்றும் நீண்ட கால உயர் பொருளாதார வருவாய், மற்றும் அவர்களுக்கு உயர்நிலைக் கல்வி வழங்கப்படுவது ஆகியவை ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்பு கொண்டவை. மேலும் கூடுதலாக, பள்ளிக்கல்வியானது ஒவ்வொரு அடுத்தடுத்த ஆண்டும் மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் பெண்களுக்கான முறை சார்ந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புக்களை சிறப்பாக வழிவகுத்துத் தருவதன் காரணமாக தலைமுறைகளுக்கு இடையே நீடித்துவரும் வறுமை சுழற்சியை தகர்க்க முடியும்.
தடைகளை தகர்த்தல்
பெண் குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காணுவதற்கு இடையூறாக விளங்கும் தடைகள் குறித்து பேசிய CRY தென்னிந்திய இயக்குனர் திரு. ஜான் ராபர்ட்ஸ் கூறியது: "சமூக-பொருளாதார சவால்கள், கலாச்சார அளவுகோள்கள் , பாலின பாகுபாடு, சிறுவயது திருமணம், போதிய பள்ளி வசதிகள் இல்லாமை , நீண்டதூர பயணத் தேவை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள். இவை அனைத்தும் பெண் குழந்தைகளின் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்வதற்கான கல்விப் பயணத்திற்கு குறிபிடத்தக்க வகையில் தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்தத் தடைகள் அதிகளவு கல்வி இடைநிறுத்த விகிதங்களுக்கு இட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல், குழந்தைத் தொழிலாளர், குறைந்த வயதில் திருமணம், பதின்மவயது கர்ப்பம்,
தொந்தரவு செய்தல் , சுரண்டல் மற்றும் குழந்தை கடத்தல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்கு பெண் குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள்."
CRY நிறுவனத்தின் “அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” பிரச்சாரத்தின் நோக்கங்கள் குறித்து ஜான் ராபர்ட்ஸ் விரிவாக எடுத்துக் கூறினார் : “எங்கள் திட்ட செயல்பாட்டுப் பகுதிகளில், ஆரம்பக் கல்வி , மேல்நிலை தொடக்க கல்வி , இடைநிலை கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வகுப்புக்களில் அதிகளவிலான பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவதையும் தக்கவைத்துக் கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய CRY மற்றும் அதன் திட்டங்கள் செயல்படுத்தும் நிறுவனங்கள், தீவிரமாக செயல்படுவார்கள். குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், கல்வியாளர்கள், சமூக உறுப்பினர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், மாநில அரசு அதிகாரிகள், பல்வேறு கல்வியில் நிலைகளில் உள்ள மாணவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சமூகத்தினரிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.
டாபிக்ஸ்