தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Covid And H3n2 Virus Can Coexist In A Patient Doctors Says

கோவிட்,H3N2 வைரஸ் ஒரே நேரத்தில் ஒருவரை தாக்க வாய்ப்பு-எச்சரிக்கும் மருத்துவர்கள்

Priyadarshini R HT Tamil
Mar 12, 2023 01:25 PM IST

Covid and Flu Virus: இஸ்ரேல்நாட்டில் 2022ம் ஆண்டு கர்ப்பிணிபெண் ஒருவர் கொரோனா மற்றும் புளூ ஆகிய இரு வைரஸ்களால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு வைரஸ்களும் ஒரே நேரத்தில் ஒரு நோயாளியை தாக்கினால் நோயின் தீவிரம் அதிகமாகும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

H3N2 புளூ உபபிரிவுவைரஸின் தாக்கம், இந்தியாவில் 5,421 பேருக்கும், புதுச்சேரியில் 79 பேருக்கும், ஒடிசாவில் 59 பேருக்கும், கர்நாடகாவில் 26 பேருக்கும் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடைக்கப்பெறவில்லை. 

தமிழகத்தில் H3N2 வைரஸ் பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக, காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 2,27,000 பேர் பரிசோதிக்கப்பட்டு, 2663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு புளூ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்ற தகவல் கொடுக்கப்படவில்லை. H3N2 வைரஸ் பாதிப்பு குறித்த முழுமையான விவரங்கள் வழங்கப்படவில்லை.  

புளூவைப்பொறுத்தவரை ஒசல்டாமிவிர் மருந்து கையிருப்பில் உள்ளதாக செய்தி வெளியிடும் அரசுகள் உலகப் புகழ் பெற்ற BMJ (British Medical Journal) லில், டாம் ஜெபர்சன் எனும் ஆய்வாளர் ஒசல்டாமிவிர் மருந்து, புளூ பரவலைக் கட்டுப்படுத்தாது என்றும், சளித்தொல்லையின் பிரச்னைகளை பெருமளவு கட்டுப்படுத்தாது என்பதையும், புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறிந்து இதனால் தவறான முறையில்  ஆய்வைமேற்கொண்ட ரோச் மருந்துநிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல மருத்துவஆய்வுக் கட்டுரைகள் புளூ தடுப்பூசி H3N2 புளூ உபபிரிவை கட்டுப்படுத்தாதுஎன்றும், (28-42 சதவீதம் தடுக்கும் திறன் மட்டுமே) உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளன.  

தமிழகஅரசு H3N2 தொடர்பான புள்ளிவிவரங்களை வழங்கவேண்டும். தற்போது H1N1 பாதிப்புஇந்திய அளவில் 955 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில்தான் அதிகளவில் 545 பேருக்கு உள்ளது என்பதை மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

தமிழகத்தில்கொரோனா பாதிப்பு 5க்கும் கீழ் சில மாதங்களுக்கு முன் இருந்தது. ஆனால் தற்போது 39 பேராக அது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்த விவரங்களையும் அரசு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மேலும் திருச்சியில் உதயக்குமார்என்ற 27 வயது இணை நோய்கள் இன்றி கொரோனாவால் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவர் தடுப்பூசி செலுத்திய விவரங்களை வழங்க வேண்டும். ஏனெனில், ஓமிக்ரான் உபவகை வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படாது. மேலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புளூ பாதிப்பும் இருந்ததா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே அரசு பொதுமக்கள் நலன்கருதி வெளிப்படையாக செயல்படவேண்டும். 

தமிழகமாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மெத்தனம் 

புளூ காய்ச்சலின்கூடுதல் பாதிப்பிற்கு காற்று மாசு முக்கிய காரணம் (வாயுக்கழிவுகள்  SO2, NO2, காற்றுத்துகள்கள், PM – Particulate matter) என தெரியவந்தும், தமிழக அனல் மின் நிலையங்கள் மாநிலமாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை முற்றிலும் மீறிய போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்காமல்  மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. 

அரசின் 11 அனல்மின் நிலையங்களும் 2021ம் ஆண்டில் விதிகளை மீறி காற்றை மாசுபடுத்திய சூழலில் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கவில்லை. நெய்வேலி, கடலூரில் செயல்படும் அனல் மின்நிலையங்கள் 86 சதவீதம் வரை தொடர் கண்காணிப்பை செய்யவில்லை. மேட்டூர் – 2, சேலம் அனல் மின்நிலையங்கள் SO2, NO2 அளவை ஆண்டு முழுவதும் கண்காணிக்கவில்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையங்கள் காற்றுத்துகள்களின் அளவை ஆண்டு முழுதும் கண்காணிக்கவில்லை. வட சென்னை திருவள்ளூர் அனல் மின்நிலையங்கள் 54 சதவீத தொடர் கண்காணிப்பு செய்யவில்லை. மேற்கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டவையாகும். எனவே மக்கள் நலன் பேணும் அரசு அனைத்து தகவல்களையும் வெளிப்படை தன்மையுடன் மக்களிடம் கூற வேண்டும் என தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது பெற்ற மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்