தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister M.k.stalin Presented Thiruvalluvar Award 2023 And Tamil Nadu Government Awards

Thiruvalluvar Award 2023 : தமிழறிஞர்கள் 10 பேருக்கு தமிழ்நாடு அரசின் விருது!

Divya Sekar HT Tamil
Jan 16, 2023 02:39 PM IST

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு வழங்கிச் முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பித்தார்.

தமிழ்நாடு அரசின் விருது
தமிழ்நாடு அரசின் விருது

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ”தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை திரு. இரணியன் நா.கு.பொன்னுசாமி அவர்களுக்கும், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும். 

மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை திரு. வாலாஜ விருதினை வல்லவன் அவர்களுக்கும், திரு.வி.க. நாமக்கல் திரு.பொ. வேல்சாமி அவர்களுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி. பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை திரு.எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 இலட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், 

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மரு. நா. எழிலன், திரு. த. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்"எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்