Weather Update: 4 மாவட்ட மக்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Weather Update: 4 மாவட்ட மக்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு(காலை 10 மணிக்குள்), செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சாலைகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும், சாலைப் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.