Chennai Mayor Priya: ‘எனக்கு நிறைய ஏக்கம் இருக்கு’ மேயர் ப்ரியா உருக்கம்!
Chennai Mayor Priya Interview: ‘இந்த பொறுப்புக்கு மாடர்ன் ஆடைகள் போடுவது பொருத்தமாக இருக்காது. ஆனால் குடும்பத்தோடு போகும் போது மாடர்ன் ஆகைகள் போடலாம்’ -மேயர் ப்ரியா
அரசியல் தலைவர்களுக்கு இணையாக மீம்களின் வருபவர், அதிக விமர்சனங்களை எதிர்கொள்பவர், தலைநகர் சென்னையின் மேயர்… ப்ரியா! அரசியல் கடந்து தன் கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பகிர்ந்திருக்கிறார் ப்ரியா. இதோ அந்த பேட்டி:
‘‘தினமும் என்னை பற்றி செய்திகள் வருது, மீம்ஸ் வருது. சில பேர் பாசிட்டிவ் ஆக போடுகிறார்கள்.சிலர் நெகட்டிவ் ஆக போடுகிறார்கள். சரி, பரவாயில்லை, பாசிட்டிவ் வரும் வரை சந்தோசம் தான். நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் போது, சிலவற்றை பார்ப்பேன். ‘இதை தவிர்த்திருக்கலாமே’ என்று தோன்றும்.
மற்றபடி, ஏற்ற இறக்கங்களை கடந்து தானே போக வேண்டும். எனக்கு முதல்வர் தான் முன்னுதாரணமாக பார்க்கிறேன். அவர் மேயராக இருந்திருக்கிறார். இந்த சென்னை இவ்வளவு அழகாக இருக்க காரணம், மேயராக அவர் கொண்டு வந்த திட்டங்கள். ஒரு மேயராக, அவரை நான் பின்பற்ற விரும்புகிறேன்.
நான் அமைதியாக இருப்பதாக கூறுவது தவறு. எந்த இடத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ, அங்கு நான் குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லா இடத்திலும் நான் அமைதியாக இருப்பதில்லை. தேவைப்படும் இடத்தில் நான் பேசுவேன்.
நான் பொதுவாகவே அமைதியான பெண் தான். தேவையில்லாத இடத்தில் பேசுவதில் பயனில்லை. என் வயதில் இருப்பவர்களை பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது. குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது.
முதலில் போன மாதிரி என்னால் வெளியே போகமுடியவில்லை. அந்த ஏக்கம் எல்லாம் என்னுள் இருக்கிறது. ஆனால் பரவாயில்லை, இது பெரிய பொறுப்பு. இது யாருக்கும் கிடைக்காது. இதை நான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த வகையிலும் இதை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
என் குழந்தையோடு நேரம் செலவழிக்க முடியவில்லை. இரவு தான் மகளை பார்க்கிறேன். புடவை, மேயர் பொறுப்புக்கு சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மழை நேரத்தில் நீரில் போக வேண்டியிருந்ததால் சல்வார் போட்டேன். ஆய்வுக்கு அது தான் பொருத்தமாகவும் இருக்கும்.
இந்த பொறுப்புக்கு மாடர்ன் ஆடைகள் போடுவது பொருத்தமாக இருக்காது. ஆனால் குடும்பத்தோடு போகும் போது மாடர்ன் ஆகைகள் போடலாம்,’’
என அந்த பேட்டியில் மேயர் ப்ரியா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்