தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Floods 2023: ’வடியாத வெள்ளம்! பூந்தமல்லி Bdo-வை தூக்கி அடித்த ஆட்சியர்!’

Chennai Floods 2023: ’வடியாத வெள்ளம்! பூந்தமல்லி BDO-வை தூக்கி அடித்த ஆட்சியர்!’

Kathiravan V HT Tamil
Dec 12, 2023 12:49 PM IST

“Chennai Floods 2023: முறையான வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ளாததால் பிடிஓவை ஆட்சியர் இடமாற்றம் செய்த சம்பவம் திருவள்ளூர் அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது”

மழை வெள்ள பாதிப்பு (கோப்புப்படம்) - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்
மழை வெள்ள பாதிப்பு (கோப்புப்படம்) - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்தது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த மழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் நீரில் மூழ்கின.

தற்போது சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படத் தொடங்கி உள்ளன. மேலும் வெள்ள நீரில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு உடனடி அடையாள சான்றுகள் வழங்கும் முகாம்களுக்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இருப்பினும் சென்னை புறநகர் பகுதிகளான காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர் குப்பம், பாரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்னும் மழைநீர் முறையாக வடியாத காரணத்தால் சில பள்ளிகள் இன்று வரை திறக்க முடியாத நிலை உள்ளது. மழை நீர் வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினை திருத்தணிக்கு இடமாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த வெங்கடேஷ் பூந்தமல்லி பிடிஓவாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முறையான வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ளாததால் பிடிஓவை ஆட்சியர் இடமாற்றம் செய்த சம்பவம் திருவள்ளூர் அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்