Today Gold Rate : ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்.. மக்கள் அதிர்ச்சி இன்றைய விலை நிலவரம்!
Today Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.25) கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold and Silver Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடியான ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. இதனிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.25) கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை இன்று (செப்.25) கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.